செயற்கை சிறுநீரகம்: டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவை இல்லாமல் போகலாம்!
தற்போது சிறுநீரக நோயாளிகள் நிவாரணம் பெற டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
தற்போது சிறுநீரக நோயாளிகள் நிவாரணம் பெற டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், மருத்துவர்கள் செயற்கை சிறுநீரகப் பரிசோதனையில் வெற்றியடைந்ததன் மூலம் மருத்துவ துறையில், சிறுநீரக சிகிச்சையில் ஒரு பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்றவற்றில் இருந்து விடுபட வேண்டிய காலம் வந்து விட்டது. செயற்கை சிறுநீரகம் உருவாக்கிய அணிக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் டாலர் பரிசும் கிடைத்துள்ளது.
செயற்கை சிறுநீரகத்திற்கு பரிசு வழங்கிய நிறுவனம்
இந்த பரிசை வழங்கிய கிட்னிஎக்ஸ் நிறுவனம், அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை மற்றும் அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் நெப்ராலஜி ஆகியவற்றுக்கு இடையேயான பொது-தனியார் கூட்டாண்மை அமைப்பு ஆகும். சிறுநீரக நோய்கள் வராமல் தடுப்பது, கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பதில் புதிய பரிசோதனைகளை துரிதப்படுத்த இந்த நிறுவனம் செயல்படுகிறது என 'ஸ்கூல் ஆஃப் பார்மசி'யில் வெளியான தகவல் கூறுகிறது.
ALSO READ | Kidney Health: சிறுநீரகத்தை டேமேஜ் செய்யும் இந்த '5' உணவுகளை தவிர்க்கலாமே..!!
செயற்கை சிறுநீரகத்தில் இரண்டு முக்கிய பாகங்கள்
UC சான் பிரான்சிஸ்கோவின் ஷுவோ ராய் PhD மற்றும் வாண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் வில்லியம் ஃபிசல் MD ஆகியோரின் தலைமையில் நாடு தழுவிய ஒத்துழைப்புடன் இந்த செயற்கை சிறுநீரகத் திட்டம் நடந்து வருகிறது.
செயற்கை சிறுநீரகத்தில் ஹெம்ஃபில்டர் மற்றும் பயோரியாக்டர் ஆகிய இரண்டு அத்தியாவசிய பாகங்கள் உள்ளன, இந்த இரண்டு ஸ்மார்ட்போன் அளவிலான சாதனங்களும் நோயாளிக்கு பொருத்தப்பட்டதன் மூலம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டன. இந்த பணிக்காக, குழுவுக்கு கிட்னிஎக்ஸ் நிறுவனம் விருதும் வழங்கியுள்ளது.
பரிசோதனை திட்டம்
பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த சிறுநீரகத் பரிசோதனை திட்டத்தில், இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்கள் மற்றும் நச்சுகளை அகற்றும் ஹீமோஃபில்டர்கள் மற்றும் இரத்தத்தில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்துதல் போன்ற பிற சிறுநீரக செயல்பாடுகளைச் செய்யும் உயிரியக்கங்களை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
பெரும்பாலான சிறுநீரக நோயாளிகள் இரத்தம் பெற ஒவ்வொரு வாரமும் பலமுறை டயாலிசிஸ் கிளினிக்குகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இது சிரமமான, அதிக செலவு பிடிக்கும் செய்முறை ஆகும். இது தவிர, சிறுநீரகம் முற்றிலும் பழுதடைந்தால், சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அதற்உ ஒருவரிடம் சிறு நீரக தானம் பெற வேண்டும். அந்த வகையில், செயற்கை சிறுநீரக பரிசோதனை ஒரு பெரிய கண்டுபிடிப்பு எனலாம்.
ALSO READ | Benefits of banana: வாழைப்பழம் சாப்பிட ஏற்ற நேரம் எது..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR