Benefits of banana: வாழைப்பழம் சாப்பிட ஏற்ற நேரம் எது..!!!

வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்றாலும், அதனை சரியான நேரத்தில் சாப்பிட்டால் அதிகபட்ச பலன்களை பெற முடியும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 9, 2021, 07:05 PM IST
  • வாழைப்பழம் சாப்பிடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
  • புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம்.
  • வாழைப்பழத்தில் 64.3 சதவீதம் தண்ணீர், 1.3 சதவீதம் புரதம், 24.7 சதவீதம் கார்போஹைட்ரேட் உள்ளது.
Benefits of banana: வாழைப்பழம் சாப்பிட ஏற்ற நேரம் எது..!!! title=

ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் சத்துக்களையும் கொண்ட வாழைப்பழம்  ஏழைகளும் வாங்கி உண்ணக் கூடிய வகையில் உள்ள மிக சிறந்த பழம் எனலாம். வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது. இது நமது தசை பிடிப்பை  நீக்குகிறது  என்று உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகிறார். 

வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் உள்ளதால், நம் உடலை உற்சாகமாக வைத்திருக்கும் என்பதோடு, சோர்வை குறைக்கிறது. உடற்பயிற்சிக்கு முன் இரண்டு வாழைப்பழங்களை சாப்பிட்டு வந்தால், உடற்பயிற்சியின் போது அதிக சோர்வு ஏற்படாது.

எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்ட வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்றாலும், அதனை சரியான நேரத்தில் சாப்பிட்டால் அதிக பலன்களை பெற முடியும்.

ALSO READ | Health Tips: மன அழுத்தத்தை விரட்டும் 6 பழங்கள்.!!

காலை உணவில் வாழைப்பழத்தைச் சேர்ப்பதன் மூலம், அதிக நன்மைகளை பெறலாம். நாள் முழுவதும் ஆற்றலை கொடுக்கும். மேலும் பல நோய்களில் இருந்து நம்மை காக்க வல்லது. வேலை செய்யும் போது சோர்வாகவோ அல்லது மன அழுத்தம் ஏற்பட்டாலோ வாழைப்பழம் சாப்பிடுங்கள்.

வாழைப்பழத்தில் காணப்படும் சத்துக்கள்

வைட்டமின்-ஏ, வைட்டமின்-பி மற்றும் மெக்னீசியம் வாழைப்பழத்தில் உள்ளது. மேலும், வைட்டமின்-சி, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்-பி6, தயாமின், ரிபோஃப்ளேவின் போன்றவையும் உள்ளன. வாழைப்பழத்தில் 64.3 சதவீதம் தண்ணீர், 1.3 சதவீதம் புரதம், 24.7 சதவீதம் கார்போஹைட்ரேட் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் ஆரோக்கியமான உடலுக்கு மிகவும் அவசியம்.

தினமும் 1 வாழைப்பழத்தை (Banana) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்வதுடன், புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!

வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்

1. ஞாபக சக்தி அதிகரிக்கும்.

2. செரிமானம் நன்றாக இருக்கும்.

3. சிறுநீரக கல் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

4. பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது

5. ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.

6. மன அழுத்தத்தைப் போக்கவும் வாழைப்பழம் உதவுகிறது.

7. உடல் எடையை கட்டுப்படுத்த, காலை உணவில் வாழைப்பழம் சாப்பிடுங்கள்.

வாழைப்பழத்தை சாப்பிடும் முறை

இதை பச்சையாகவும் சாப்பிடலாம்,  சமைத்தும் சாப்பிடலாம். வாழைக்காயை காய்கறி அல்லது சிப்ஸ் வடிவில் உண்ணலாம், அதே நேரத்தில் பழுத்த வாழைப்பழத்தை  ஸ்மூத்தி, ஷேக், சாண்ட்விச் போன்ற வடிவங்களில் சாப்பிடலாம்.

வாழைப்பழம் சாப்பிட சரியான நேரம்

காலை உணவுக்குப் பிறகு வாழைப்பழத்தை உட்கொள்ள வேண்டும். வாழைப்பழம் சாப்பிட சரியான நேரம் காலை 8 மணி முதல் 9 மணி வரை.

(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.

ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News