உற்பத்தியாகும் பொருட்கள் வீணாகமல் தடுக்க அவற்றை பதப்படுத்தி பயன்படுத்துவது நூற்றாண்டுகளாக தொடரும் நடைமுறைகள் ஆகும். உற்பத்தி, வளர்ச்சி, நுகர்வு மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றின் அடிப்படையில் உணவு பதப்படுத்துதல் துறை சர்வதேச அளவில் வளர்ந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பழங்கள் காய்கறிகள், பால் மற்றும் பால் பொருட்கள், மீன், இறைச்சி என விரைவில் வீணாகும் பொருட்கள் முதல், மதுபானங்கள், தானியங்கள் என உணவுப்பொருட்கள் பதப்படுத்தப்பட்டு, ஆண்டு முழுவதும் எல்லாப் பொருட்களும் கிடைக்கின்றன.


ஆனால், அல்சைமர் நோய்க்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதற்கும் இடையே வலுவான தொடர்பு இருப்பதை அண்மை ஆராய்ச்சி ஒன்று நிரூபிக்கிறது. பாண்ட் பல்கலைக்கழக (Bond University) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சியில் அல்சைமர் போன்ற நினைவுத்திறன் தொடர்பான நோய்களுக்கும் உணவுப்பழக்கத்திற்கும் உள்ள தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது. 


Journal of Alzheimer's Disease என்ற அல்சைமர் நோய் தொடர்பான பிரத்யேக சஞ்சிகையில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.  438 ஆஸ்திரேலியர்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 108 பேருக்கு அல்சைமர் அறிகுறிகள் இருந்தன. 


மேலும் படிக்க | உடல் பருமனால் அவதியா? இந்த உணவுகள் வேண்டவே வேண்டாம்


ஆஸ்திரேலிய இமேஜிங் பயோமார்க்கர் மற்றும் லைஃப்ஸ்டைல் ஸ்டடி ஆஃப் ஏஜிங் (Australian Imaging Biomarker and Lifestyle Study of Aging) ஆகியவற்றிலிருந்து தரவைப் பயன்படுத்தியது, இந்த அமைப்பு 2006 முதல் தன்னார்வ பங்கேற்பாளர்களைக் கொண்ட குழுவை உருவாக்கி, அதில் பங்கேற்பாளர்களுக்கு அல்சைமர் நோய் தொடர்பான வளர்ச்சியைக் கவனித்து வருகிறது.


உணவுப் பழக்கம் மற்றும் அல்சைமர்


அல்சைமர் நோயால் கண்டறியப்பட்டவர்கள் இறைச்சி துண்டுகள், தொத்திறைச்சிகள், ஹாம், பீட்சா மற்றும் ஹாம்பர்கர்களை அதிகமாக உண்டார்கள். அவர்கள் உணவில், ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, அவகேடா, கேப்சிகம், வெள்ளரிக்காய், கேரட், முட்டைக்கோஸ், கீரை போன்ற காய்கறிகளும் பழங்களும் குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


உலகளாவிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கும் டிமென்ஷியா, 55 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. இந்த நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை வரும் 20 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும், 2030ல் 82 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | மது அருந்துவதை நிறுத்தினால் வரும் பக்கவிளைவுகள்! இதுக்கு தான் குடிமகன்கள் பயப்படறாங்களோ?


டிமென்ஷியா நோய்க்கு தற்போது சிகிச்சை இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள் எச்சரிக்கினிறனர். இந்த ஆய்வின் முடிவுகள், இளைஞர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதை அதிகரிக்க ஊக்குவிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாகவும், பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதைக் குறைக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதாக  இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் தஹேரா அகமது தெரிவித்தார்.


மூளையில் அல்சைமர் வளர்ச்சி நடுத்தர வயதில் தொடங்குகிறது எனபதும், இது கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறையினால் உருவாதாக இருக்கலாம்ம் அவர் கருதுகிறார். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, இலை கீரைகள், ஆர்கானிக் உணவுகள் அல்லது வீட்டில் சமைத்த உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் தஹேரா அகமது தெரிவித்தார்.


மேலும் படிக்க | தினமும் இரண்டு நெல்லிக்காயை இப்படி சேர்த்துகிட்டா, உலக அழகி நீங்க தான்!


இந்த ஆய்வின் அடிப்படையில் எந்தெந்த உணவுகளை இளம் வயதினர் தவிர்க்கவேண்டும்? இந்த பட்டியல் உங்களுக்கு உதவும்...


ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிக அளவில் சர்க்கரை, உப்பு அல்லது கொழுப்பு அதிகம் உள்ள பொருட்களை தவிக்கலாம் 
மைதாவில் செய்யப்பட்ட பாஸ்தா
 குறைந்த நார்ச்சத்து மற்றும் அதிக கலோரி உணவுப்பொருட்கள்
பதப்படுத்தப்பட்ட சிப்ஸ் 
அதிக உப்பு மற்றும் கலோரி கொண்ட தின்பண்டங்கள் 
கேக்குகள், மிட்டாய்கள் மற்றும் குக்கீகள், கலோரிகள், சர்க்கரை மற்றும் கொழுப்புகள் 
அதிக அளவு நிறைவுற்ற கொழுப்புகளைக் கொண்டிருக்கும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி


மேலும் படிக்க | உணவுக்குப் பிறகு சிட்ரஸ் பழங்கள் வேண்டவே வேண்டாம்! மறுத்தால் பிரச்சனை தான்...


(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ