டயட்ல இருக்கீங்களா: இவைதான் டயட்டிங்கின் பக்க விளைவுகள், ஜாக்கிரதை
Dieting Side Effects: நீண்ட நாட்களுக்கு குறைவாக சாப்பிடுவது உடலில் மோசமான விளைவை ஏற்படுத்தும். பகலில் வயிறு நிரம்ப சாப்பிட்டு, பின்னர், மாலையில் கண்டிப்பாக லேசான உணவை சாப்பிட வேண்டும்.
டயடிங் அல்லது குறைவாக சாப்பிடுவதன் பக்க விளைவுகள்: எடை இழப்புக்கு நாம் உண்ணும் உணவில் கட்டுப்பாட்டைக் கொண்டு வருவது நல்லது. ஆனால் சிலர் டயடிங், அதாவது உணவு கட்டுப்பாடு என்ற பெயரில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே சாப்பிடுகிறார்கள்.
நீண்ட நாட்களுக்கு இப்படி செய்வது உடலில் மோசமான விளைவை ஏற்படுத்தும். பகலில் வயிறு நிரம்ப சாப்பிட்டு, பின்னர், மாலையில் கண்டிப்பாக லேசான உணவை சாப்பிட வேண்டும். அதிக நாட்களுக்கு ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு வந்தால், அது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது.
ஆரோக்கியமான உடலுக்கு போதுமான அளவு சாப்பிடுவது மிகவும் முக்கியம். இது உங்களை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருக்கும். க்ராஷ் டயட் உடலில் மிக மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. நீண்ட நாட்களுக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு டயடிங் இருந்தால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
குறைவான உணவை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள்
- குறைந்த எடை:
தொடர்ந்து ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமோ, அல்லது, மிகக் குறைவாகவோ உணவு உட்கொண்டு வந்தால், அது எடை குறைவதற்கு வழிவகுக்கும். இதன் காரணமாக உடல் பலவீனமாகவும் சோர்வாகவும் இருக்கும். விரைவில் நோய்வாய்ப்படும் நிலை ஏற்படலாம்.
மேலும் படிக்க | சுவைக்க சுவைக்க திகட்டாத சுவையையும் நன்மையையும் அள்ளித்தரும் திராட்சை
- செரிமான அமைப்பு பாதிக்கப்படுகிறது:
குறைவாக சாப்பிடுவதால் உங்கள் செரிமான அமைப்பும் பாதிக்கப்படலாம். இதன் காரணமாக, உடலுக்கு சரியான அளவு ஊட்டச்சத்து கிடைப்பதில்லை. இதன் காரணமாக குடல்கள் உணவை ஜீரணிப்பதிலும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதிலும் சிரமம் ஏற்படுகின்றது. இது செரிமான செயல்முறையையும் தாமதப்படுத்துகிறது.
- மலச்சிக்கல் பிரச்சனை:
பல நேரங்களில் குறைவாக சாப்பிடுவதும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. உணவில் போதுமான நார்ச்சத்து இல்லாததால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இது தவிர, செரிமான அமைப்பின் செயல்முறையும் குறைகிறது.
- மனச்சோர்வு:
தேவையான அளவை விட குறைவாக சாப்பிடுவதன் மூலமும் உங்களுக்கு மனச்சோர்வு ஏற்படலாம். நீங்கள் மிகக் குறைந்த கலோரிகளை உட்கொண்டால், உங்களுக்கு கவலை அல்லது மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகின்றன.
- பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி:
பல நேரங்களில், போதுமான உணவை உட்கொள்ளாததால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு தொற்று மற்றும் குளிரால் ஏற்படும் பிரச்சனைகளால் அதிக பாதிப்புகள் ஏற்படலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சருமத்திற்கு பொலிவை கூட்டும் பால், இதுவே 6 அற்புதமான நன்மைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR