Almond: பாதாமை அதிகமா சாப்பிட்டா? ஆரோக்கியம் அம்பேல் தான்! அளவுக்கு மீறினால் அமிர்தமும்??
Health Hazards Of Almonds: பாதாம் பருப்பை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பாதாம் பருப்பை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் இவை
பல்வேறு சத்துகளை கொண்ட பாதம் பருப்பை நாம் அன்றாடம் சப்பிடுவது நல்லது, அது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று சொல்வதைக் கேட்டிருக்கலாம். ஆனால், எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு என்பதையும் மறந்துவிடக் கூடாது. பாதாமை உண்பதே உடலுக்கு தீக்கும் விளைவிக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் உண்மையான விஷயம் தான்.
பாதாம் நுண்சத்துக்கள் (micronutrients in Almond) நிரம்பிய உலர் பழங்களில் முக்கியமான ஒன்று. பாதாம் பருப்பில் புரதம் (Proteins), நார்ச்சத்து (Fibre), ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் (Anti-oxidants), பொட்டாசியம் (Potassium), பாஸ்பரஸ் (Phosphorus), மக்னீசியம் (Magnesium), விட்டமின் E (Vitamin- E) என ஊட்டச் சத்துகள் அபரிதமாக இருக்கிறது.
இதை உட்கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அதன் நுகர்வு மூளை மற்றும் நினைவகத்தை கூர்மைப்படுத்த மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதனை தினமும் உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
ஆனால், பாதாம் சாப்பிடுவதால் நன்மைகள் மட்டுமல்ல, சில தீமைகளும் உள்ளன. அதிகப்படியான அளவில் பாதாமை உண்டால், ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | இள நரை பிரச்சனையா? இந்த இயற்கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்
செரிமானம் தொடர்பான பிரச்சனைகள்
அதிகப்படியான பாதாமை உட்கொள்வது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். உண்மையில், இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. பாதாம் பருப்பை அதிகமாக உட்கொள்வதால் மலச்சிக்கல், வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
எடை அதிகரிப்பு
எடை இழப்புக்கு பாதாம் உதவுகிறது. ஆனால் இதில் அதிக அளவு கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளதா, அதிக அளவு உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்கும். எனவே, எப்போதும் பாதாமை குறைந்த அளவில் உட்கொள்ளுங்கள். ஒருவர் ஒரு நாளைக்கு 5-6 பாதாம் பருப்புகளுக்கு மேல் உட்கொள்ளக்கூடாது.
சிறுநீரக கல் பிரச்சனை
பாதாமில் அதிக அளவு ஆக்சலேட் உள்ளது, இது சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஏற்கனவே சிறுநீரக கல் பிரச்சனை இருந்தால், பாதாம் பருப்பை அதிக அளவில் உட்கொள்வதை தவிர்க்கவும். இது கற்கள் பிரச்சனையை மேலும் அதிகரிக்கலாம்.
மேலும் படிக்க | மனதையும் உடலையும் சோர்வாக்கும் பொட்டாசியம் குறைபாடு! இந்த அறிகுறிகள் இருக்கா?
ஒவ்வாமை
அதிகப்படியான பாதாம் சாப்பிடுவது பலருக்கு ஒவ்வாமை பிரச்சனைகளை உண்டாக்கும். பாதாம் பருப்பை அதிக அளவில் உட்கொள்வதால் உடலில் வீக்கம், அரிப்பு மற்றும் சொறி போன்றவை ஏற்படும். எ
ஹைபர்கேலீமியா பிரச்சனை
பாதாம் பருப்பில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், அதை அதிகமாக உட்கொள்வது இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவை அதிகரிக்கிறது, இது ஹைபர்கேமியா பிரச்சனைக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக, சிறுநீரகம் மற்றும் இதயம் பாதிக்கப்படலாம்.
மலமிளக்கிகள், இரத்த அழுத்தம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்ற மருந்துகளை உட்கொள்பவர்கள் பாதாமை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வயிறு தொடர்பான அனைத்துக் கோளாறுகளையும் போக்கும் மணத்தக்காளிக் கீரையின் அற்புதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ