தைராய்டு என்பது, நம் கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. இது ஒரு சிறிய பாகம் என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் தற்போது, தைராய்டு பிரச்சனை மக்களிடையே மிகவும் பொதுவானதாகிவிட்டது. தைராய்டு நோய்களில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. அவை ஹைப்போ தைராய்டிசம் என்னும் குறைவான ஹார்மோன்கள் உற்பத்தி நிலை, மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் என்னும் அதிக ஹார்மோன்கள் உற்பத்தி நிலை ஆகும்.
தைராய்டு சுரப்பியின் வேலை தைராக்ஸின் ஹார்மோனை உற்பத்தி செய்வதாகும், இது உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் மற்றும் ஆற்றல் அளவைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால் இந்த சுரப்பி சரியாக செயல்படாதபோது, தைராய்டு ஹார்மோன் போதுமான அளவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. தைராய்டு நோய் ஏற்பட்டால், உடல் எடை அதிகரிப்பு, சோர்வு, பலவீனம், உடல் வலி, முடி உதிர்தல், வறண்ட சருமம் போன்ற பிரச்சனைகள் (Health Tips) ஏற்படும். ஆனால் இதற்காக கவலைப்படத் தேவையில்லை, ஏனென்றால் இந்த சிக்கலை யோகாவின் உதவியுடன் எளிதாக தீர்க்க முடியும். இன்று இந்தக் கட்டுரையில் தைராய்டைக் கட்டுப்படுத்த உதவும் 5 யோகாசனங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்
புஜங்காசனம்
1. இந்த ஆசனத்தை செய்ய, முதலில் தரையில் குப்புறப் படுத்துக் கொள்ளுங்கள்.
2. உங்கள் முழங்கைகளை உங்கள் இடுப்புக்கு நெருக்கமாகவும் உள்ளங்கைகளை மேல்நோக்கியும் வைக்கவும்.
3. இப்போது மெதுவாக மூச்சை உள்ளிழுக்கும்போது, உங்கள் மார்பை மேல்நோக்கி உயர்த்தவும்.
4. அதன் பிறகு மெதுவாக உங்கள் வயிற்றை உயர்த்தவும்.
5. இந்த நிலையில் 30-50 வினாடிகள் இருக்கவும்.
6. இப்போது மூச்சை வெளியேற்றும் போது, மெதுவாக உங்கள் தலையை தரையை நோக்கி தாழ்த்தவும்.
7. இந்த செயல்முறையை 3-5 முறை செய்யவும்.
மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவிற்கு அதிகமானால்... விஷமாகும் தண்ணீர்..!
சேதுபந்தாசனம்
1. இந்த ஆசனத்தை செய்ய, முதலில் தரையில் உங்கள் நேராக படுத்துக் கொள்ளுங்கள்.
2. இப்போது உங்கள் முழங்கால்களை மடக்கி, உள்ளங்கால்களை தரையில் வைக்கவும்.
3. உங்கள் இரு கைகளாலும் உங்கள் கால்களின் குதிகால்களைப் பிடிக்கவும்.
4. மூச்சை உள்ளிழுக்கும் போது, மெதுவாக உங்கள் உடலை உயர்த்தவும்.
5. இந்த நிலையில் 1-2 நிமிடங்கள் இருங்கள்.
6. இதற்குப் பிறகு, மூச்சை வெளியேற்றி ஆரம்ப நிலைக்கு வரவும்.
7. இந்த செயல்முறையை 3-5 முறை செய்யவும்.
ஹலாசனம்
1. இந்த ஆசனத்தைச் செய்ய, முதலில் யோகா பாயில் நேராக படுத்துக் கொள்ளுங்கள்.
2. உங்கள் கைகளை உடலுக்கு நெருக்கமாகவும், உள்ளங்கைகளை தரையில் வைக்கவும்.
3. இதற்குப் பிறகு, மூச்சை உள்ளிழுக்கும் போது, மெதுவாக கால்களை உயர்த்தி, 90 டிகிரி கோணத்தை உருவாக்கவும்.
4. இப்போது உங்கள் முதுகை மேலே தூக்கி மூச்சை வெளிவிடவும்.
5. பின்னர் மெதுவாக கால் விரல்களை தரையில் தொட முயற்சிக்கவும்.
6. இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
7. பின்னர் மெதுவாக ஆரம்ப நிலைக்கு திரும்பவும்.
8. இந்த செயல்முறையை 3-5 முறை செய்யவும்.
உஸ்ட்ராசனம்
1. இந்த ஆசனத்தை செய்ய, தரையில் உட்கார்ந்து முழங்கால்களை மடக்கி, இரு கைகளையும் இடுப்பில் வைக்கவும்.
2. இப்போது ஒரு ஆழமான மூச்சை எடுத்து, கீழ் முதுகுத்தண்டில் முன்னோக்கி அழுத்தம் கொடுக்கவும்.
3. இவ்வாறு செய்யும் போது, தொப்புளில் முழுமையான அழுத்தத்தை உணர வேண்டும்.
4. இதற்குப் பிறகு, உங்கள் கைகளால் கால்களைப் பிடித்து, இடுப்பை பின்னோக்கி வளைக்கவும்.
5. 30-60 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பிறகு, நீங்கள் மெதுவாக இயல்பு நிலைக்கு வரலாம்.
6. இந்த செயல்முறையை 3-5 முறை செய்யவும்.
சர்வாங்காசனம்
1. இந்த ஆசனத்தை செய்ய, நேராக படுத்துக் கொள்ளுங்கள்.
2. இப்போது உங்கள் கால்களை உயர்த்தி, உங்கள் வலது கைகளால் உங்கள் இடுப்பை பிடித்துக் கொள்ளவும்.
3. இந்த நேரத்தில், உங்கள் கால்களை நேராக வைக்கவும்.
4. இந்த நிலையில் 30-50 வினாடிகள் இருக்கவும்.
5. அதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பவும்.
6. இந்த செயல்முறையை 3-5 முறை செய்யவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | வயிறு தொடர்பான அனைத்துக் கோளாறுகளையும் போக்கும் மணத்தக்காளிக் கீரையின் அற்புதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ