வெள்ளரிக்காய் சாப்பிட்ட உடனே இவற்றை சாப்பிட வேண்டாம்; ஜாக்கிரதை
வெள்ளரிக்காய் கோடையில் அதிக அளவில் உட்கொள்ளப்படுகிறது. ஆனால் வெள்ளரியை உட்கொண்ட பிறகு என்னென்ன பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், இல்லையெனில் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
கோடை காலத்தில் வெள்ளரிக்காயை உட்கொள்வதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் பெரும்பாலும் மக்கள் வெள்ளரிக்காய்க்குப் பிறகு இதுபோன்ற பொருட்களை உட்கொள்கிறார்கள், அதன் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். வெள்ளரிகாய் சாப்பிட்ட பிறகு சிலவற்றை உட்கொள்வதைத் நாம் தவிர்க்க வேண்டும். எனவே வெள்ளரிக்காய் சாப்பிட்ட பிறகு எந்த பொருட்களை சாப்பிடக்கூடாது என்பதை நாம் தெரிந்துக்கொள்வோம்.
வெள்ளரிக்காய் சப்பிட்ட பிறகு இவற்றை உட்கொள்ள வேண்டாம்
* வெள்ளரிக்காய் சப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது. வெள்ளரிக்காயில் அதிகளவில் நீர்சத்து இருக்கிறது, இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெள்ளரிக்காயை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் இருமல் பிரச்சனையை ஏற்படுத்துவது மட்டுமின்றி வயிற்றில் பலவித கோளாறும்களும் ஏற்படும். அப்படிப்பட்ட நிலையில் வெள்ளரிக்காய் சாப்பிட்ட பிறகு, மறந்த கூட தண்ணீர் குடித்திட வேண்டாம்.
மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்
* கோடையில் வெள்ளரிக்காய் சாப்பிட்ட உடனே மோர் குடிக்கக் கூடாது. வெள்ளரிக்காய்க்கு மேல் மோர் உட்கொண்டால், அது வயிறு தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும். அத்தகைய சூழ்நிலையில், சிறிது நேரம் கழித்தே மோர் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* வெள்ளரிக்காய் சாப்பிட்ட உடனே பால் குடிக்கக் கூடாது. ஏனென்றால், பால் மற்றும் வெள்ளரிக்காய் உட்கொள்வது சளி மற்றும் சூடு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும், இதன் காரணமாக காய்ச்சல், இருமல் அல்லது பிற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், வெள்ளரி சாப்பிட்ட பிறகு பால் குடிப்பதை தவிர்க்கவும்.
வெள்ளரிக்காய் - மருத்துவ குணங்கள்
* வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும். வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு.
* இவற்றைவிட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல்இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும்.
* செரிமானம் தீவிரமாகும், பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேச ஜீரண நீர் சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புத ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு.
* மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும்.
மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
* நுரையீரல் கோளாறுகள், கபம், இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல. காய்கறிகளுள்ளே குறைவான சக்தி / கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும் கலோரி 18 தான்.
* இக்காய் பித்த நீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது. அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகளை, வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமை மிக்க உணவாகத் திகழ்வதையும் நிரூபித்துள்ளன.
(பொறூப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Health Alert: சாப்பிட்ட பின் ஒரு போதும் செய்யக் கூடாதவை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR