ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்கு வைட்டமின்கள், தாதுக்கள், புரதம், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் போன்ற சத்துக்கள் அவசியமானது என்றாலும் அதைவிட ஒரு மனிதனுக்கு அவசியமானது தண்ணீர் தான். தண்ணீர் நமது உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், நமது உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதையும் உறுதி செய்கிறது.  ஒவ்வொரு நாளும் குறைந்தது எட்டு முதல் பத்து கிளாஸ் தண்ணீரை உட்கொள்ளுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.  சிலர் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்குமாறு பரிந்துரைக்கின்றனர்.  பொதுவாக குடிநீர் என்பது நிலத்தடி நீர், மழைப்பொழிவு அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட மூலத்திலிருந்து பெறப்படுகிறது.  வயது வந்தவரின் உடல் எடையில் 50% (பெண்கள்) முதல் 60% (ஆண்கள்) வரை நீர் உள்ளது.  நமது உடலிலுள்ள செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகள் ஆகியவற்றின் இயக்கத்திற்கு தண்ணீர் முக்கியமான சக்தி மூலமாக செயல்படுகிறது.  இவ்வளவு நன்மைகளை கொண்டுள்ள தண்ணீரை எப்படியெல்லாம் குடிக்கக்கூடாது என்கிற விதிமுறைகள் உள்ளது, அதன்படி தண்ணீர் குடிக்கும்போது நாம் அந்த அந்த தவறுகளை செய்யாமல் இருப்பது நல்லது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் தோலில் இந்த அறிகுறிகள் ஏற்படலாம்! 



1) ஆயுர்வேதத்தின் படி, நின்றுகொண்டு தண்ணீர் குடிக்கும்போது அது உங்கள் கீழ் வயிற்று பகுதிக்கு செல்கிறது, இதனால் தண்ணீரிலிருந்து உங்கள் உடலுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது.  நின்றுக்கொண்டு தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் மற்றும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தி உங்களுக்கு பல்வேறு ஆபத்துகளை ஏற்படுத்தும்.  நீங்கள் நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் போது, உங்கள் உடல் உறுப்புகளுக்கு தண்ணீர் செல்லாது.


2) தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், சிலர் எட்டு முதல் பத்து டம்ளர் வரை தினமும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.  ஆனால் இது உண்மையானதல்ல, எப்போதும் தாகம் இல்லாமல் நீங்கள் தண்ணீர் குடித்தால் அது உங்கள் மூளையை குழப்பமடையச் செய்யும்.  நீங்கள் உங்கள் தாகத்தைத் தணிக்கும்போது ​​​​உங்கள் உடல் விழுங்கும் ரிஃப்ளக்ஸ் குறைக்கிறது.  எனவே தாகம் எடுத்தால் மட்டுமே நீங்கள் தண்ணீர் குடிக்க வேண்டும்.


3) உணவு உண்பதற்கு முன் தண்ணீர் குடித்தால் உங்கள் வயிறு நிரம்பிவிடும் இதனால் உங்களால் சரியாக சாப்பிட முடியாது.  நீங்கள் சரியாக சாப்பிடவில்லை என்றால் போதுமான ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலுக்கு கிடைக்காமல் போகலாம்.  மேலும் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும்.  இதுதவிர குமட்டல் மற்றும் மலச்சிக்கல் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.


4) தண்ணீரை விரைவாக விழுங்குவது நல்லதல்ல, தண்ணீரை வேகமாக குடிப்பதால் உங்கள் உடலிலிருந்து வெளியேற வேண்டிய அசுத்தங்கள் அனைத்தும் வெளியேறாமல் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்ப்பையில் அப்படியே படிந்துவிடும்.  தண்ணீரை மெதுவாகவும், சிறிது சிறிதாகவும் குடிப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், உங்கள் செரிமான அமைப்பை வலுப்படுத்தவும் உதவும்.


5) நம்மில் பலர் நீண்ட நேர வேலைக்குப் பிறகு குளிர்ந்த நீரை குடிப்பதை விரும்புகின்றனர், இது ஒரு பொதுவான விஷயம் தான் என்றாலும் குளிர்ந்த நீரை குடிப்பது உடலுக்கு தீங்கினை விளைவிக்கும். ஆயுர்வேதத்தின் படி, குளிர்ந்த நீர் வயிற்று சுரப்பு மற்றும் செரிமான அமைப்பின் வெப்பநிலையை சீர்குலைக்கிறது, இதனை உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த உடல் கூடுதல் ஆற்றலைச் செலவிட வேண்டும்.  இதன் விளைவாக உணவை ஜீரணிக்க போதுமான ஆற்றல் கிடைக்காமல் போகலாம், குளிர்ந்த நீர் இரத்த நாளங்களைச் சுருக்கி செரிமானத்தை கடினமாக்குகிறது.  இது உங்கள் பத்தாவது மண்டை நரம்பு, வேகஸ் நரம்பைத் தூண்டுகிறது மற்றும் இதயத் துடிப்பைக் குறைக்கும்.


மேலும் படிக்க | ஹோலியில் வரும் தோல் அலர்ஜி..! பாதுகாப்பாக இருக்க ஈஸி வழிமுறை 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ