அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் தோலில் இந்த அறிகுறிகள் ஏற்படலாம்!

High Cholesterol: உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நாள்பட்ட நிலைமைகள் உள்ளவர்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Mar 7, 2023, 05:54 AM IST
  • அதிக கொலஸ்ட்ராலால் சாந்தெலஸ்மா பாதிப்பு ஏற்படும்,
  • தோலில் தடிப்பு அல்லது அலர்ஜி ஏற்படுத்துவது அதிக கொலஸ்ட்ராலை குறிக்கிறது.
  • பாதங்கள் அல்லது காலில் உள்ள புண்கள் குணமடையாமல் இருக்கும்.
அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் தோலில் இந்த அறிகுறிகள் ஏற்படலாம்!  title=

அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தானது என்று அனைவருக்கும் தெரிந்தது தான், அதிகளவு கொலஸ்ட்ரால் ஒருவருக்கு மரணத்தை கூட ஏற்படுத்தும் அளவிற்கு கொடுமையான ஒன்று.  கொலஸ்ட்ரால் உடலுக்கு சில நன்மைகளை கொடுத்தாலும், அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவு உடலுக்கு பெரும்பாலும் தீமையையே கொடுக்கிறது.  தமனிகளில் ஏற்படும் கொழுப்புகளின் அடைப்பால் சில சமயம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணமும் ஏற்பட்டு விடுகிறது.  தமனிகள் கொலஸ்ட்ரால் படிவதால் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுகிறது.  உட்கார்ந்த வாழ்க்கை முறை, கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, மது அருந்துவது அல்லது புகைபிடிப்பது போன்றவை உங்கள் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க வழிவகுக்கும்.  உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நாள்பட்ட நிலைமைகள் உள்ளவர்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.  பொதுவாக அதிக கொலஸ்ட்ரால் எவ்வித அறிகுறிகளையும் காட்டாது, அதனை சில ரத்த பரிசோதனைகளால் மட்டுமே கண்டறிய முடியும்.  இருப்பினும் அதிக கொலஸ்ட்ரால் உங்கள் சருமத்தில் சில அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.

மேலும் படிக்க | சிறுநீரகத்தை தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்..! இதோ எளிமையான 5 வழிகள் 

1) தோலில் நீலம் அல்லது ஊதா நிறத்தில் இருக்கும் ஒரு வலை போன்ற அமைப்பு காணப்படும், பொதுவாக வானிலை குளிர்ச்சியாக இருக்கும்போது இது தோன்றும்.  தமனிகளில் அடைப்பைக் குறிக்கும் கொலஸ்ட்ரால் எம்போலைசேஷன் நோய்க்குறியின் அறிகுறியாக இருக்கலாம்.

2) சாந்தெலஸ்மா பாதிப்பு ஏற்படும், அதாவது கண்களின் மூலையைச் சுற்றி மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிற மெழுகு வளர்ச்சி இருக்கும்.  இது தோலின் கீழ் கொலஸ்ட்ரால் படிவதால் ஏற்படுகிறது.

3) சாந்தெலஸ்மாவைப் போன்றே சந்தோமா எனும் நிலை ஏற்படுகிறது, ஆனால் இது கீழ் கால் மற்றும் உள்ளங்கைகளின் பின்புறத்தில் காணப்படுகிறது.  

4) சமீபத்திய ஆராய்ச்சிப்படி, தோலில் தடிப்பு ஏற்படுவது மற்றும் அலர்ஜி ஏற்படுவதும் அதிக கொலஸ்டராலின் அறிகுறியாக கருதப்படுகிறது, இது ஹைப்பர்லிபிடேமியா என்று அழைக்கப்படுகிறது.

5) அதிக கொழுப்பு அளவுகள் உங்கள் தோலின் கீழ் இரத்த ஓட்டத்தை குறைப்பதால் சருமத்தில் வறட்சி ஏற்படுகிறது.  தோல் செல்கள் போதுமான ஊட்டச்சத்து மற்றும் தோல் நிறத்தை பெற முடியாமல் போகும். நீங்கள் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தால், கால்கள் ஊதா நிறமாக மாறும் மற்றும் தோல் வெளிர் நிறமாக மாறும்.

6) பாதங்கள் அல்லது காலில் உள்ள புண்கள் குணமடையாமல் இருக்கும்.  அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு இந்த புண்கள் மீண்டும் மீண்டும் வரலாம், காலில் போதுமான அளவு ரத்த ஓட்டம் இல்லாத காரணத்தினால் இது ஏற்படுகிறது.

மேலும் படிக்க | மியூஸ்லி சாப்பிட்டால் சர்க்கரை நோய்க்கு தயாராகிக் கொள்ளுங்கள்..! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News