வெறும் வயிற்றில் முந்திரி சாப்பிட்டால் என்னவாகும் தெரியுமா
Cashew Side Effects: முந்திரியை வெறும் வயிற்றில் உட்கொள்வது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
புதுடெல்லி: முந்திரி (cashew) சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் இதில் உள்ளது, மேலும் வைட்டமின் ஈ அதிகளவில் இதில் நிறைந்துள்ளது, ஆனால் சில உடல்நலப் பிரச்சினைகளில், நீங்கள் முந்திரி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த பிரச்சனைகளில் வெறும் வயிற்றில் அதிக முந்திரி சாப்பிட்டால் என்ன விளைவு ஏற்படும் என்று பார்ப்போம்.
உயர் இரத்த அழுத்தத்தம்: முந்திரி பருப்பில் (Cashew) சோடியம் உள்ளது. இதை அதிகமாக சாப்பிட்டால், உடலில் சோடியத்தின் அளவை அதிகரிக்கலாம். உயர் இரத்த அழுத்தம் பிரச்சனையில், சோடியம் அளவு அதிகரிப்பது உங்கள் பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.
ALSO READ | Health News: மூட்டு வலிக்கான ருசியான நிவாரணம், மஞ்சள் ஊறுகாயின் recipe!
வாயுத் தொல்லை: முந்திரி பருப்பில் நார்ச்சத்து உள்ளது. இதனை அதிக அளவு மற்றும் வெறும் வயிற்றில் (Empty Stomach) சாப்பிடுவதால் உடலில் நார்ச்சத்து அதிகரிக்கிறது. இதனால் வாயு பிரச்சனை ஏற்படும்.
சிறுநீரக பிரச்சனை: முந்திரியில் பொட்டாசியம் உள்ளது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், உடலில் பொட்டாசியத்தின் அளவை அதிகரிப்பது நோயை அதிகரிக்கும். சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளில் முந்திரியை அதிகமாக உட்கொள்ள வேண்டாம். ஒரு நபர் ஒரு நாளைக்கு 4 முதல் 5 முந்திரி சாப்பிடலாம்.
ALSO READ | Health News: ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் கொடை வள்ளல் இந்த கொடை மிளகாய்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR