Health Tips In Tamil: தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு கவலையளிப்பது உடல் எடை அதிகரிப்புதான். மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு வகைகள் ஆகியவற்றின் தாக்கத்தால் வேகமாக உடல் எடை அதிகரிப்பை சிலர் சந்திக்கின்றனர். பள்ளி பருவத்தில் ஃபிட்டாக இருந்தேன், கல்லூரிக்கு பின் குண்டாகிவிட்டேன் என பலர் கூறுவதை பார்க்க முடியும். அதிலும் குறிப்பாக இளம் வயதிலேயே பெரிய தொப்பை வருவது பலருக்கும் வருத்தத்தை அளிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படியிருக்க பலரும் தனது உடல் தோற்றத்தில் கவனம் செலுத்த முதலில் தொப்பையை குறைக்க வேண்டும் என நினைப்பார்கள். காரணம், சிலருக்கு தொப்பை என்பது சங்கடத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி தன்னம்பிக்கையை குறைக்கும் ஒரு காரணியாகவும் இருக்கிறது. இருப்பினும் ஒருவர் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி, முயற்சி செய்தால் நிச்சயம் ஒருநாள் தொப்பை கொழுப்பு குறையும். அதில் நல்ல உணவு பழக்கவழக்கம் முக்கியம்.


அதிக கலோரி கொண்ட உணவுகள், அதிக சர்க்கரை அளவு கொண்ட உணழுகள ஆகியவை உடல் எடை அதிகரிப்புக்கு இட்டுச்செல்லும். அதிலும் உணவில் போதிய அளவு நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவில்லை என்றாலும் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் செரிமானம் இரண்டும் மோசமாகும். இதனால் வயிற்றில் கொழுப்பு தேங்கி தொப்பையாகும். அந்த உங்களுக்கு தொப்பை போடுவதை தடுக்க இந்த நான்கு விஷயங்களை கவனத்தில் வைத்துக்கொண்டாலே போதும். இதனை செய்யாமல் இருந்தால் தொப்பை வரும் வாய்ப்புகள் குறையும்.


மேலும் படிக்க | Anti-inflammatory Foods: உடல் அழற்சியை இயற்கையாக குறைத்து... வலியை போக்கும் சூப்பர் உணவுகள்


புரதச்சத்து மிக மிக முக்கியம்


உங்களின் உணவுகளில் தேவையான புரதச்சத்து நீங்கள் சேர்த்துக்கொள்ளவில்லை என்றால் அது பெரிய தவறு. அதனால் உங்களுக்கு தொப்பை ஏற்படும் வாய்ப்பு அதிகம். புரதச்சத்துதான் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தி, கொழுப்பை கரைத்து தசைகள் வளரவும், அதனை சீராக்கவும் உதவும். எனவே புரதச்சத்து குறைவாக எடுத்துக்கொண்டால் வளர்ச்சிதை மாற்றம் குறைந்து, தொப்பை ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.


அடிக்கடி நொறுக்குத் தீனிகளை கொறிப்பது


தேவையற்ற, பசியற்ற நேரங்களில் உண்பதும் ஒரு கெட்டப் பழக்கம்தான். தொடர்ச்சியாக நொறுக்குத் தீனிகளை கொறித்துக்கொண்டே இருப்பது தொப்பை போடுவதற்கு முக்கிய காரணமாக அமையும். தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலம் வளர்ச்சிதை மாற்றத்திற்கு தொடர்ந்து இடையூறு ஏற்பட்டுக்கொண்ட இருக்கும். இதனால் இன்சுலின் சுரப்பது குறைந்து, கொழுப்பு உடலில் தேங்கும். அதிக கலோரிகள் கொண்ட உணவுகள், உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள் உங்களின் தொப்பை கொழுப்பு சேர்வதற்கு முக்கிய பங்காற்றலாம்.


உணவுமுறையில் கவனம் செலுத்தாதது


குறைவான அளவில் சமமான ஊட்டச்சத்துக்களை உணவாக எடுத்துக்கொள்வதை தவிர்ப்பதன் மூலமும் தொப்பை கொழுப்பு சேரும். அதாவது நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலும் கூட அதிக கலோரிகளை எடுத்துக்கொள்வதால் உடல் எடை குறைப்புக்கு அது உதவாது, தொப்பை போடுவதற்கு வழிவகுக்கும். எனவே அளவாக உணவுகளை எடுத்துக்கொண்டு, அதில் சமமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதை உறுதிசெய்தால் தொப்பை போடாது.


அதீத இனிப்புகளை சாப்பிடுவது


இந்த தவறை மட்டும் செய்யவே கூடாது. அதிகளவு சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை எடுத்துக்கொண்டால் இன்சுலின் எதிர்ப்பை உண்டாக்கும், உடலில் கார்டிசால் அளவு அதிகரிக்கும், இதனால் தொப்பையில் கொழுப்பு தேங்கும். மேலும், சர்க்கரையில் எவ்வித ஊட்டச்சத்தும் இல்லாததால் அது உடல் எடை அதிகரிப்புக்கே இட்டுச்செல்லும்.


(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும்  பொதுவான மற்றும் வீட்டு வைத்தியம் சார்ந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)


மேலும் படிக்க | மூளை - எலும்புகளை காலி செய்யும் அலுமினியம் ஃபாயில்... நிபுணர்களின் எச்சரிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ