வெள்ளை கரு அதிகம் சாப்பிடுகிறீர்களா?... ஜாக்கிரதை
முட்டையின் வெள்ளைக் கருவை அதிகம் சாப்பிட்டாலும் உடலுக்கு சில பிரச்னைகள் உருவாக வாய்ப்புகள் இருக்கின்றன.
முட்டை ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. அதிலும் முட்டையின் வெள்ளை கரு அதிகம் பேரால் விரும்பப்படும் உணவாக இருக்கிறது. உடற்பயிற்சி செய்பவர்கள் தொடங்கி ஷவர்மா சாப்பிடுபவர்கள்வரை முட்டையின் வெள்ளைக்கருவுக்கு மவுசு இருக்கிறது.
அதில் இருக்கும் புரதம், சோடியம், செலினியம், கால்சியம், போலேட் போன்ற தாதுக்கள் சத்து கொடுக்கின்றன. ஒரு முட்டையின் வெள்ளைக்கருவில் 16 கலோரி உள்ளது. அதில் கொழுப்பு இல்லை.
ஆனாலும் வெள்ளைக்கருவை அதிகம் சாப்பிட்டால் பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. வெள்ளைக்கருவை அதிகம் சாப்பிட்டால் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, இருமல், தும்மல், சருமத்தில் தடிப்பு போன்றவை உருவாகலாம்.
அதுமட்டுமின்றி கோழிகளின் உடலில் காணப்படும் சால்மோனெல்லா எனும் ஒருவகை பாக்டீரியா முட்டையின் வெண் படலத்தை பாதிக்கும் தன்மை உடையது. அந்த பாக்டீரியா முட்டை ஓடுகளின் உள்புற மற்றும் வெளிப்புற பரப்புகளில் படர்ந்திருக்கலாம்.
சால்மோனெல்லாவை நீக்குவதற்கு நீண்ட நேரம் மற்றும் அதிக வெப்பநிலையில் முட்டையை வேக வைக்க வேண்டும். இல்லாவிட்டால் முட்டையின் மேல் பகுதியிலும், குறைவான வெப்பநிலையில் வேகவைத்த முட்டைகளிலும் அந்த பாக்டீரியாக்கள் படிந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
மேலும் படிக்க | Processed Food: பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு குட்பை சொல்ல இதைவிட வேற காரணம் தேவையா
அதேபோல், வெள்ளைக்கருவை அதிகம் சாப்பிட்டால் பயோட்டின் குறைபாடும் ஏற்படலாம். முட்டையின் வெள்ளைக்கருவில் இருக்கும் அவிடின் எனும் புரதம் உடலில் உள்ள பயோட்டினை கரைத்துவிடும். அதில் உள்ள அல்புமின், உடலில் உள்ள பயோட்டினை உறிஞ்சுவதற்கு காரணமாக இருக்கிறது.
இதன் காரணமாக சரும பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உருவாகிறது. முட்டையின் வெள்ளைக்கருவில் புரதங்கள் அதிகம் உள்ளன. மருத்துவர்களின் கருத்துப்படி, சிறுநீரக பிரச்னையால் அவதிப்படுபவர்கள் அதிக அளவு புரதம் சாப்பிடுவது ஆபத்தானது. சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகும் நபர்கள் தினமும் 0.6 முதல் 0.8 கிராம் வரையிலான புரதத்தையே உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR