Spring onion: புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் வெங்காயத்தாளின் நன்மைகள்
கந்தகச் சத்து அதிகம் கொண்ட வெங்காயத்தாளில் வைட்டமின் சி, பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்கள் உள்ளன. இதிலுள்ள பெக்டின் என்னும் கார்போஹைட்ரேட், பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெங்காயத்தாள் கீரை வகையைச் சேர்ந்தது. வெங்காயம், பூண்டு போன்றவற்றின் குடும்பத்தை சேர்ந்ததாக இருந்தாலும், அவற்றின் நன்மைகளோடு கீரையின் நல்ல பண்புகளையும் கொண்டது வெங்காயத் தாள்.
வாரத்தில் ஒருமுறை கீரையாய் சமைத்து சாப்பிட்டால், நோய்கள் நம்மை அண்டாது. அப்படி என்ன சிறப்பு இருக்கிறது இந்த வெங்காயத்தாளுக்கு என்று கேட்கிறீர்களா? இதன் சிறப்புகளை பட்டியலிட்டால், வெங்காயத்தாளின் தாழ் பணிவீர்கள்.
மருத்துவ பண்புகளையும் கொண்ட வெங்காயத்தாள், சீன பாரம்பரிய மருத்துவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. கந்தகச் சத்து அதிகம் கொண்ட வெங்காயத்தாளில் வைட்டமின் சி, பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்கள் உள்ளன. இதிலுள்ள பெக்டின் என்னும் கார்போஹைட்ரேட், பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
Also Read | Ayurvedic Agni Tea: அக்னி தேநீர் இருக்கும்போது வேறு டீ எதற்கு?
ரத்தம் தொடர்பான எந்த்வொரு பிரச்சனைக்கும் வெங்காயத் தாள் மிகவும் சிறந்தது. ரத்தத்தில் சேர்ந்துள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவும் வெங்காயத்தாள், ரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. உடலின் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரிக்கிறது. இதிலுள்ள வைட்டமின் கே, ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுத்து சீரான ரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.
கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது ஸ்பிரிங் ஆனியன். இதய ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் வெங்காயத்தாளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், செரிமான உபாதைகள் அனைத்தும் சரியாகிவிடும்.
வெங்காயத்தாளில் குறைந்த அளவு கலோரிகளே இருப்பதோடு, அதில் வைட்டமின் சி, பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளதும் சிறப்பு.
உண்மையில் வெங்காயத்தாள் பல்வேறு சிறப்புகளையும் தன்னுள் வைத்துள்ளது.
Also Read | சூப்பரான வெள்ளரிக்காய்ப் பாயசம் செய்வது எப்படி? இப்படித்தான்…
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR