துவாதசியன்று அகத்திக்கீரை நெல்லிக்காய் சாப்பிடுவதன் காரணம் தெரியுமா?
துவாதசியன்று அகத்திக் கீரையும், நெல்லிக்காயும் சாப்பிடவேண்டும் என்பதற்கான ஆரோக்கிய காரணம் இது...
ஏகாதசியன்று உபவாசம் இருப்பவர்கள் அதற்குக் அடுத்த நாள் துவாதசியன்று அகத்திக் கீரையும், நெல்லிக்காயும் சாப்பிடவேண்டும் என்பது காலம் காலமாக தொடரும் பாரம்பரியம். அதற்கு காரணம் என்ன தெரியுமா?
பூமியை ஒருதடவை சுற்றிவர சந்திரனுக்கு ஏறக்குறைய இருபத்தொன்பரை நாட்கள் எடுக்கும். ஒவ்வொரு நாளும் திதி என்று கூறப்படுகிறது. சந்திரமாதம் ஒன்றில் மொத்தம் 30 திதிகள் உள்ளன. அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரையில் உள்ள 15 திதிகள் வளர்பிறை திதிகள் ஆகும்.
பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரையில் உள்ள 15 திதிகள் தேய்பிறை என்று அறியப்படுகிறது. அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் ஒன்றாக உதித்து ஒன்றாக மறைகின்றன. அதிலிருந்து ஒவ்வொரு நாளும் 12 டிகிரி வீதம் சந்திரன் சூரியனிலிருந்து பிரிந்து செல்லும்.
பதினொன்றாவது நாள் அன்று, சந்திரன், ஏகாதசியன்று சூரியனிலிருந்து 132 டிகிரி பின்னால் இருக்கிறது. பௌர்ணமியன்று சந்திரன் சூரியனிலிருந்து 180 டிகிரியில் இருக்கிறது.
Also Read | இந்த பாலில் டீ குடித்திருக்கிறீர்களா? இனிமே இதை டிரை பண்ணி பாருங்க!
மேற்கூறிய நாட்களில் சூரியனிலிருந்து சந்திரன் தொலைவில் விலகிச் செல்லுவதில் புவிஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.அந்த சமயத்தில் வழக்கம்போல உணவு உண்டால் அது செரிமாணம் ஆவதில் சிக்கல் ஏற்படும் என்பதன் அடிப்படையில் ஏகாதசி விரதம் அனுசரிக்கப்படுகிறது.
அன்று சூரியன் நடுவரைக்குத் தெற்கே மிக அதிகமான தூரத்தில் இருப்பதால் புவிஈர்ப்பு சக்தி மிகவும் அதிகமாக இருக்கும் முதல் பத்து நாட்கள் உணவு உட்கொண்டு, அதன் பிறகு இடைவெளி கொடுக்கிறோம். அன்று செரிமாண உறுப்புகள் ஓய்வு எடுத்தாலும், அதற்கு தேவையான சக்திகளான வைட்டமின்
"ஏ" யும், "சி" யும் போதுமான அளவு தேவை.
அதனால்தான், ஏகாதசி விரதத்திற்கு பிறகு. துவாதசியன்று வைட்டமின் "ஏ" சத்து நிறைந்த அகத்திக் கீரையையும், வைட்டமின் "சி" சத்து நிறைந்த நெல்லிக்காயையும் உணவுடன் சேர்த்துக் கொள்ளுகிறோம். மாதத்திற்கு இருமுறை எகாதசி விரதம் இருந்து, துவாதசியன்று சத்தான உணவு உண்டால், உடல் ஆரோக்கியம் மேம்படும்.
Also Read | மருத்துவக் குணங்கள் நிறைந்த ஓமத்தின் பயன்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR