COVID குணமானபிறகு உடல்நலனை மேம்படுத்தும் யோகாசனங்கள்
கொரோனா பாதித்தவர்கள், தங்கள் அரோக்கியத்தை மீட்டெடுக்க யோகா மிகவும் சிறந்தது. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பொது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் முக்கிய உறுப்புகளின் உடற்திறனையும் மேம்படுத்துகிறது யோகாசனம்.
கொரோனா பாதித்தவர்கள், தங்கள் அரோக்கியத்தை மீட்டெடுக்க யோகா மிகவும் சிறந்தது. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பொது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் முக்கிய உறுப்புகளின் உடற்திறனையும் மேம்படுத்துகிறது யோகாசனம்.
கொரோனா வைரஸ் தொற்று சுவாச மண்டலத்தை பாதிக்கிறது. அது பாதிப்பின் முதல் கட்டத்தில், இது மேல் சுவாசக் குழாயின் சளி சவ்வில் பரவுகிறது, இதன் காரணமாக இருமல், காய்ச்சல், பலவீனம் போன்ற அறிகுறிகள் தோன்றும். நோயாளிகள் தங்களுக்கு ஒரு பொதுவான சளி போன்ற தொற்று இருப்பதாக உணர்கிறார்கள், ஆனால் 6-7 நாட்களுக்குப் பிறகு சுவாசக் குழாய் மற்றும் நுரையீரல் திசுக்களில் தொற்று பரவும் போது நிலைமைகள் மோசமாகிவிடும்.
நுரையீரல் திசுக்கள் சிதைந்துப் போய், ஆக்ஸிஜன் குறைவதால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது, பின்னர் இது ARDS (கடுமையான சுவாசக் கோளாறு நோய்க்குறி) அல்லது கடுமையான நிமோனியாவாக மாறுகிறது.
Also Read | Research on Protein: புரதச்சத்து சப்ளிமெண்ட் பெண்களுக்கு நல்லது, ஆண்களுக்கு தேவையில்லை!
நோயாளிகளில் பலர் எளிமையான மருத்துவ சிகிச்சையால் எளிதாக குணமாவர்கள். அவர்களுக்கு ஏற்பட்டத் தொற்று மேல் சுவாசக் குழாய் வரை மட்டுமே இருக்கும். சுவாசக் குழாய் முழுவதிலும் நோய்த்தொற்று பரவியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிர் காக்கும் மருந்துகள், ஆக்ஸிஜன் கொடுப்பது, என பல சிகிச்சைகளை மேற்கொண்டு குணமாவார்கள்.
கோவிட் நோய் வந்து குணமானவர்களின் நுரையீரல் மற்றும் சுவாச தசைகளின் செயல்திறனை மேம்படுத்த யோகாசன பயிற்சி உதவும். சுவாச பாதையை சுத்தம் செய்யவும்,
பொது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் எதிர்காலத்தில் மீண்டும் வைரஸ் தொற்று ஏற்படாமல் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் யோகா பயிற்சிகள் செய்யவேண்டும்.
நோயாளியின் நிலையை கருத்தில் கொண்டு, அதற்கேற்ப யோகா பயிற்சிகள் செய்ய வேண்டும். யோகாவை முறையாக ஆசிரியரின் வழிகாட்டுதலின் கீழ் பயன்படுத்தி நோய் எதிர்ப்புத் தன்மையை மேம்படுத்திக் கொள்ளலாம்.
Also Read | Health Tips: தாம்பத்திய வாழ்வை மேம்படுத்தும் சிவப்பு முள்ளங்கி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR