சிறியவர் முதல் பெரியார்கள் முதல் அனைவரு விரும்பி சாப்பிடும் ஒரு உணவுதான் நூடுல்ஸ். இதை எனக்கு பிடிக்காது என்று எவர் சொல்லியும் நாம் கேட்டிருக்க மாட்டோம். ஏனென்றால், நூடுல்ஸ் அனைவரையும் அப்பாடி மயக்கி வைத்திருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை பலர் ஸ்நாக்ஸ் நேரத்தில் மட்டுமின்றி, காலை மற்று இரவு நேர உணவாகவும் உட்கொள்கின்றனர். 


எளிமையாக சொன்னால் இன்றைய காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை விட ஜங்க் உணவுகளைத் தான் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆகவே பெற்றோர்களும் குழந்தை விரும்பி சாப்பிடுகிறது என்று அடிக்கடி வாங்கி கொடுக்கின்றோம். இது தான் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு.


இந்த நூடுல்ஸில் சத்துக்கள் மிகவும் குறைவு மற்றும் ஆரோக்கியத்தை சீரழிக்கக் கூடியதுஎன்பது உங்களுக்கு தெரியுமா?. அதை பற்றி பாப்போம்: 


> நூடுல்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் பருமனை உண்டாக்கும். இதில் நார்ச்சத்துக்களும், புரோட்டீனும் குறைவு என்பதால், இது எடையைக் குறைக்க சிறந்த உணவுப் பொருள் அல்ல. 


> நூடுல்ஸ் சாப்பிடுபவர்களுக்கு, இதை சாப்பிடாமல் இருப்பவர்களை விட வளர்ச்சிதை மாற்ற நோய் அறிகுறியின் அபாயம் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.


> நூடுல்ஸ் மைதாவால் உருவாக்கப்பட்டதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமானது. 


> நூடுல்ஸில் சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் அல்லது ட்ரான்ஸ் கொழுப்புக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.


> நூடுல்ஸில் உள்ள உட்பொருட்கள், வயிற்றில் வளரும் சிசுவின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.


> ஸ்டார்ச் நிறைந்த நூடுல்ஸை உயர் வெப்பநிலையில் சூடேற்றும் போது, அது புற்றுநோயை உண்டாக்கும் அக்ரைல்அமைடை உற்பத்தி செய்யும்.


> நூடுல்ஸை ஒருவர் உட்கொண்டால், அது உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், தலைவலி மற்றும் குமட்டல் போன்றவற்றை உண்டாக்கும்.


> நூடுல்ஸை உட்கொண்டால், அது இரத்த அழுத்த பிரச்சனைகளை உண்டாவதொடு, இதய நோய்க்கும் வழிவகுக்கும்.


> நூடுல்ஸில் உள்ள புரோபிலீன் கிளைக்கால், உடலால் எளிதில் உறிஞ்சப்பட்டு, இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் தேங்கி, நோயெதிர்ப்பு மண்டலத்தை சேதப்படுத்தும்.


> நூடுல்ஸை தொடர்ச்சியாக உட்கொள்ளும் போது, அது மூளையின் சிந்திக்கும் ஆற்றல் மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கும்.