முதுமை பருவத்தில் பல வித நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. வயது , ஏற ஏற ​​நமது உடலின் செயல்பாடுகள் இயற்கையாகவே குறையத் தொடங்குகிறது. வயதுக்கு ஏற்ப, இதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் எலும்பு பலவீனம் போன்ற பல உடல்நலப் பிரச்சனைகளின் ஆபத்து அதிகரிக்கிறது. எனவே, இந்த நேரத்தில் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூத்த குடிமக்கள் வழக்கமான சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம். இதன் மூலம் பல தீவிர நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும், இதனால் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதும் சாத்தியமாகும். இந்நிலையில், வயதானவர்களுக்கு எந்தெந்த சுகாதாரப் பரிசோதனைகள் கட்டாயம் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். 


நியூபெர்க் அஜய் ஷா ஆய்வகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர். அஜய் ஷா, ஒவ்வொரு மூத்த குடிமகனும் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய சில முக்கியமான உடல் நல பரிசோதனைகளை பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார். இந்தச் சோதனைகள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய முக்கிய தகவல்களைத் தருவதோடு மட்டுமல்லாமல், மனநலத்திலும் கவனம் செலுத்துவதால், வாழ்க்கையின் முதுமை என்னும் முக்கியமான கால கட்டத்தில் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.


1. இரத்த சர்க்கரை சோதனை


மூத்த குடிமக்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது. இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என்றால், இதய நோய்கள், நரம்பு பாதிப்பு மற்றும் பார்வை இழப்பு போன்ற கடுமையான உடல் நல பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. HbA1c சோதனை மூலம் சர்க்கரை அளவை கண்காணிப்பது அவசியம். இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.


2. இரத்த அழுத்தத்தை கண்காணித்தல்


சைலண்ட் கில்லர் என அழைக்கப்படும் உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இரத்த அழுத்தத்தை வழக்கமாக பரிசோதிப்பதன் மூலம், இந்த நிலையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கட்டுப்படுத்தலாம். முதியவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்த அழுத்தத்தை தொடர்ந்து அளவிட வேண்டும்.


3. கொலஸ்ட்ரால் பரிசோதனை


முதியவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி கொலஸ்ட்ராலை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவு லிப்பிட் பரொஃபைல் சோதனை மூலம் அளவிடப்படுகிறது. அதிக கொலஸ்ட்ரால் அளவு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். 


4. எலும்பு அடர்த்தி சோதனை


முதுமையில் பலர் சந்திக்கும் பொதுவான பிரச்சனை மூட்டு வலி, கீல்வாதம். இதற்கு முக்கிய காரணம் கால்ஷியம் மற்றும் வைட்டமின் டி குறைபாடு. ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புகள் பலவீனமடைந்து உடையக்கூடிய நிலையும் முதுமையில் அத்கம் ஏற்படுகிறது. இந்நிலையில், எலும்பு அடர்த்தி சோதனை அவசியமாகிறது. இதில் எலும்புகளின் வலிமையை அளவிடப்படுகிறது. எலும்பு முறிவு அபாயத்தையும் இந்த சோதனை மூலம் மதிப்பிடலாம். வயதானவர்கள், குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், இந்த பரிசோதனையை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | உடல் பருமன் குறைய... கொழுப்பு கரைய... நீங்கள் கை விட வேண்டிய சில பழக்கங்கள்


5. கண் பார்வை மற்றும் செவிப்புலன் பரிசோதனை


வயதுக்கு ஏற்ப பார்வை மற்றும் செவித்திறன் குறையும். செவிப்புலன் சோதனைகள் காது கேளாமையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். அதே நேரத்தில் வழக்கமான கண் பரிசோதனைகள் கண்புரை, கிளௌகோமா மற்றும் மாகுலர் டிஜெனரேஷன் போன்ற பிரச்சனைகளைக் கண்டறிய முடியும்.


6. புற்றுநோய் பரிசோதனை


இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் பாதிப்பு பற்றி அதிகம் கேள்விப்படுகிறோம். புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், சிகிச்சையளிப்பது எளிதாகும். வயதானவர்கள் மார்பகப் புற்றுநோய்க்கான மேமோகிராம், பெருங்குடல் புற்றுநோய்க்கான கொலோனோஸ்கோபி மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்க்கான பிஎஸ்ஏ சோதனை போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.


7. தைராய்டு செயல்பாடு சோதனை


தைராய்டு கோளாறுகள் சோர்வு, எடை அதிகரிப்பு மற்றும் மனநிலை மாற்றங்களை ஏற்படுத்தும். தைராய்டு ஹார்மோன் அளவை ஒரு எளிய இரத்த பரிசோதனை மூலம் சரிபார்க்கலாம்.


மேலும் படிக்க | மூட்டு வலிக்கு முடிவு கட்டும்... சில எளிய வீட்டு வைத்தியங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ