கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு மது பாதிப்பு உள்ளதா?
ஆராய்ச்சியாளர்கள் ஒரு இரத்த சோதனை முலமாக குழந்தைகளுக்கு மது பாதிப்பு உள்ளதா எனக் கருவிலேயே சோதனை மூலமாகக் கண்டுபிடித்துவிடலாம் என தெரிவித்துள்ளனர்.
நியூயார்க்: ஆராய்ச்சியாளர்கள் ஒரு இரத்த சோதனை முலமாக குழந்தைகளுக்கு மது பாதிப்பு உள்ளதா எனக் கருவிலேயே சோதனை மூலமாகக் கண்டுபிடித்துவிடலாம் என தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, அமெரிக்கா மாகாண பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில், மாறிவரும் வாழ்க்கைச் சூழல் காரணமாக மது பாதிப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. இதன்காரணமாக, கருவில் உள்ள குழந்தைகள் கூட பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை சரிசெய்யும் விதமாக, கருவிலேயே குழந்தைகளுக்கு மது பரிசோதனை செய்ய முடியும். தாய் மற்றும் சிசுவின் ரத்த மாதிரியை சேகரித்து, அதனை பரிசோதித்து, மது பாதிப்பு உள்ளதா எனக் கண்டறிந்து, உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
கருவிலேயே குழந்தைகளுக்கு மது பாதிப்பு ஏற்படுவதால், அவர்களுக்கு வளர்சிதை மாற்றங்கள் தொடங்கி, மனநிலை பாதிப்பு வரை பல்வேறு வகையான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன்காரணமாக, முன்கூட்டியே ஆல்கஹால் பாதிப்பை கண்டறிந்து உரிய நடவடிக்கை பெற்றோர்கள் எடுக்க வேண்டுமென்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.