புதுடெல்லி: Corona Test Confussion: பஞ்சாப் அமைச்சர் சுக்ஜீந்தர் சிங் ரந்தாவுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் மாறுபட்ட முடிவுகள் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப் மாநிலத்தின் பட்ஜெட் அமர்வு நேற்று தொடங்கியது. அந்த மாநில சிறை மற்றும் ஒத்துழைப்பு துறை அமைச்சர் சுக்ஜீந்தர் சிங் ரந்தாவாவுக்கு எடுக்கப்பட்ட கோவிட் பரிசோதனையில் பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் என இரு வேறு முடிவுகள் கிடைத்துள்ள


கொரோனா பரிசோதனைகளில் ஒன்று அரசு ஆய்வகத்திலும், மற்றொன்று தனியார் ஆய்வகத்திலும் மேற்கொள்ளப்பட்டது. அரசு ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட  சோதனையில்  கோவிட்–பாசிட்டிவ் எனவும், தனியார் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட  சோதனையில்  கோவிட்–நெகடிவ் எனவும் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Also Read | பள்ளி மாணவனுடன் ராகுல் காந்தி Push-up சவால்  சமூக ஊடகங்களில் வைரல்    


பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக சட்டமன்ற உறுப்பினர்கள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை (Corona Test) எடுப்பது கட்டாயம். அதன்படி பிப்ரவரி 25 அன்று சண்டிகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் அமைச்சருக்கு மாதிரிகளை எடுக்கப்பட்டது. மொஹாலியில் உள்ள பஞ்சாப் பயோடெக்னாலஜி இன்குபேட்டரில் (Punjab Biotechnology Incubator, Mohali) உள்ள அரசு ஆய்வகம் பிப்ரவரி 26 அன்று கொடுத்த பரிசோதனை முடிவுகள் அமைச்சருக்குக் கோவிட்–பாசிட்டிவ் என்று தெரிவித்தது.
 
ஆனால் பிப்ரவரி 27 அன்று சண்டிகரில் உள்ள அதுலயா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் (Atulaya Healthcare Private Limited) என்ற தனியார் ஆய்வகத்தில் அவருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் வந்த முடிவுகள், அமைச்சர் சுக்ஜீந்தர் சிங் ரந்தாவாவுக்கு கோவிட்–நெகடிவ் என்றுதெரிவித்தது. இருவேறு வித்தியாசமான கொரோனா பரிசோதனை முடிவுகள் அமைச்சருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Also Read | திமுக கூட்டணியில் முதல் ஒப்பந்தம் கையெழுத்து, அடுத்த ஒப்பந்தம் யாருடன்? 


இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவிட் பரிசோதனையில் அவருக்கு கோவிட் – பாசிட்டிவ் என தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் அனைத்து சிகிச்சைகளையும் மேற்கொண்டார். அவருக்கு கோவிட் நோய் வந்ததால், நோய் எதிர்ப்பு சக்தியை உடல் மேம்படுத்தி இருக்கும். இந்த நிலையில் அமைச்சருக்கு எடுக்கப்பட்ட முதல் பரிசோதனையில் கோவிட் இருப்பதாகவும், அடுத்து தனியார் ஆய்வகத்தில் எடுக்கப்பட்ட சோதனை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் கூறப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளையும், அச்சத்தையும் எழுப்புகிறது. 


ஒருமுறை கோவிட் பாதிப்பு ஏற்பட்டவருக்கு 5மாதங்களிலேயே மீண்டும் கோவிட் – பாசிட்டிவ் வந்துவிடாது என்றும் அமைச்சர் கூறுகிறார்.  


Also Read | TN Assembly Elections 2021: திமுக கூட்டணியில் முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR