கோடைக் கால சீசனில் எலுமிச்சைப்பழம் ஒரு முக்கியமான பானமாகும். இந்த கோடைகால பானத்தை வீட்டிலேயே எளிதாக நாம் தயாரிக்கலாம், அதே சமயம் மார்க்கெட்களிலும் இந்த பழம் எளிதாகக் கிடைக்கும். சிலர் இதை சோடா வாட்டரில் சேர்த்துக் குடிக்க விருமப்புவார்கள். குறிப்பாக ஏராளமானோர் தொப்பை கொழுப்பை குறைக்க இந்த பானத்தை குடிக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எலுமிச்சை பழம் உடல் எடையை குறைக்குமா?
எலுமிச்சை நீரை தொடர்ந்து குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று கேள்விப்பட்டிருப்போம். அதிகாலையில் ஒரு டம்ளர் எலுமிச்சைப் பழத்தை குடிப்பது தொப்பையைக் குறைக்கும் என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர், பலர் இந்த பானத்தில் தேனைச் சேர்த்து குடித்து நல்ல பலனைப் பெறுவார்கள், ஆனால் எலுமிச்சை தண்ணீர் உண்மையில் எடையைக் குறைக்கிறதா என்பது தான் கேள்வி. 


மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்


எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி-6, பெக்டின் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது. எலுமிச்சையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன, இது இதய ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கிறது மற்றும் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. எலுமிச்சைப் பழத்தைப் பயன்படுத்துவதன் மூலம், வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு குறையத் தொடங்குகிறது, அதாவது, உங்கள் எடை வேகமாக குறைகிறது.


பசியைக் கட்டுப்படுத்த உதவும்
எலுமிச்சையில் பெக்டின் என்ற பொருள் உள்ளது, இது பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடலை நச்சுத்தன்மையாக்குகிறது. எலுமிச்சையில் உள்ள பொட்டாசியம் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதோடு இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.


எலுமிச்சைப்பழ ஜூஸ் தயாரிப்பது எப்படி?
உங்கள் தொப்பை கொழுப்பில் எலுமிச்சையின் தாக்கம் அதிகமாக இருக்க வேண்டுமெனில், முதலில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் ஒரு சிறிய எலுமிச்சையை பிழியவும். இப்போது உப்பு மற்றும் சீரக தூள் சேர்த்து குடிக்கவும். இல்லையெனில் காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை வேகமாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கத்து.


(பொறூப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR