மதுவினால் உடல் எடை அதிகரிக்குமா?
அளவுக்கு அதிகமா சாப்பிட்டா அமுர்தமும் நஞ்சாகும் என்பது பழமொழி உண்டு. அதுபோல மதுவை அளவாக அருந்தினால் ஆபத்து இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக பருகினால் ஆபத்து ஏற்படும்.
இப்போது எல்லாம் மது அருந்துவது மற்றும் புகை பிடித்தல் என்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது. இன்றைய காலத்தில் பொழுதைப் போக்குவதற்குகாக மது அருத்துவோர் கூட ஏராளம் பேர் இருக்கிறார்கள்.
இதுவரை ஆண்கள் தான் அதிக அளவில் ஆல்கஹால் அருந்திக்கொண்டிருந்தனர். தற்போது பெண்களும் குடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
மதுவில் கொழுப்புகள் அதிகம் உள்ளன. ஆல்கஹாலில் அதிகமான அளவில் கலோரிகள் இருக்கும். எனவே இதனை பருகினால், உடல் எடை அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிடும். பின் உடல் பாதிப்பின் ஆரம்ப நிலையான தொப்பை வந்து, பின் பல்வேறு கொடிய நோய்களும் உடலில் வந்துவிடும்.
மது அதிகமாக அருந்தும் போது ஏற்படும் மாற்றங்களால் கல்லீரலில் கொழுப்புப் பொருட்கள் சேர்கின்றன. அதிகமாக கொழுப்பு அமிலங்கள் உற்பத்தியாக்கப் படுகின்றன. அதே நேரம் கொழுப்பு அமிலங்கள் குறைவாகவே செலவழிக்கப் படுகிறது. இதனால் இவை கல்லீரலில் படிந்து கல்லீரலை பெரிதாக்கிவிடும். எனவே உடல் எடை அளவுக்கு அதிகமாகும்.