மது அருந்துதலை விட புகைபிடிக்கும் பழக்கம் ஒருவரை வேகமாக கொள்ளுகிறது.  இந்தியாவில் 34.6 சதவீதம் பேர் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர், மேலும் புகைப்பிடிப்பதால் ஆண்டுக்கு குறைந்தது 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறக்க நேரிடும் அபாயம் உள்ளது.  புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இலவச இணைப்பாக புற்றுநோய், இதய நோய் ஏற்படுகிறது. இதன்மூலம் சராசரியாக இந்தியாவில் 53% பாதிக்கப்பட்டு இறக்கின்றனர்.  தற்போது கிடைத்துள்ள தகவல் படி அதிகமாக புகைப்பிடிப்பவர்களுக்கு பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க |  Fourth wave of Covid: அலட்சியப்படுத்த வேண்டாம், இதுதான் புதிய அறிகுறிகள்


இதனால் கண்கள் வறண்டு போதல், கண்புரை, நீரிழிவு ரெட்டினோபதி, கண் நரம்புகளில் பாதிப்பு போன்றவை ஏற்படுகிறது.  இத்தகைய பாதிப்புகளுக்கு உரிய நேரத்தில், உரிய சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் நிரந்தர பார்வையிழப்பு பிரச்சனை ஏற்பட்டுவிடும் வாய்ப்பு அதிகமுள்ளது.  புகைபிடிக்க பயன்படும் அந்த புகையிலையில் கிட்டத்தட்ட 7,000-த்திற்கும் மேற்பட்ட நச்சுப்பொருட்கள் நிறைந்துள்ளன, இதனை அன்றாடம் புகைப்பதால் இதிலுள்ள நச்சுக்கள் கண்களை வெகு விரைவில் பாதித்து விடுகிறது.  



இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி என்னவென்றால் புகைப்பழக்கத்தை கைவிடுவது ஒன்றுதான்.  புகைபிடிப்பதை போலவே அதிக கணினி அல்லது மொபைல்  பார்ப்பது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.  ஒவ்வொரு இருபது நிமிட இடைவேளைக்கு பிறகும் நாம் திரையிலிருந்து நமது பார்வையை சற்று விலக்கி வைக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  மேலும் அடிக்கடி கண்களை சுழற்றுதல், 20 ஆதி தூரத்தில் உள்ள பொருட்களை உற்று பார்த்தால் போன்ற பயிற்சிகளையும் செய்ய வேண்டும்.  மேலும் வைட்டமின் சி, ஈ, துத்தநாகம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை தினமும் உண்பதன் மூலம் கண்களின் பாதுகாப்பு பலப்படும்.  அதோடு ஒவ்வொருவரும் அடிக்கடி வழக்கமான கண் பரிசோதனையை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.



மேலும் படிக்க |  சிறுநீரக கல்லை கரைக்கும் 3 ஜூஸ்கள்; தினமும் அருந்திட தீர்வு நிச்சயம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR