சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பது, குறிப்பாக புற ஊதா கதிர்கள் நம் மீது படும் போது,  கோவிட் 19 தொற்று பாதிப்பை குறைக்கும் என என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில், இது கண்டறியப்படுள்ளது இது குறித்து மேலும் ஆய்வு நடத்தியதில், கோவிட்-19 தொற்றினால் ஏற்படும் இறப்புக்கான வாய்ப்பு குறைவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சூரிய ஒளி உடலில் படும் படி நீண்ட நேரம் இருப்பது பொதுவாகவே மக்களின்  ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது அனைவரும் அறிந்தஃ விஷயம் தான்.


பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் டெர்மட்டாலஜியில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, அந்தக் காலகட்டத்தில் 2474 மாவட்டங்களில் புற ஊதா அளவை அமெரிக்கக் கண்டத்தில், 2020  ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதத்திற்கு இடையில் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கைகளுடன் ஒப்பிட்டு நடத்தப்பட்டுள்ளது.


ALSO READ | ”வாலை” நறுக்கினால் மட்டுமே வாழலாம்; கர்ப்பம் தரிக்கவும் கடுமையான கட்டுப்பாடு


அதிக அளவு புற ஊதா கதிர்கள் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே கோவிட் -19 காரணமாக ஏற்பட்ட இறப்புகள் இருப்பதாக ஆய்வு குழு கண்டறிந்தது.


இங்கிலாந்து மற்றும் இத்தாலியில் இதே போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. வைரஸ் தொற்று மற்றும் இறப்பு அபாயத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். வயது, சமூகம், சமூக-பொருளாதார நிலை, மக்கள் தொகை அடர்த்தி, காற்று மாசுபாடு, வெப்பநிலை மற்றும் உள்ளூர் பகுதியில் தொற்றுநோய்களின் அளவு ஆகியவற்றை கொண்டு ஆய்வு செய்தனர்


சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதால், தோல் நைட்ரிக் ஆக்சைடை வெளியேற்றுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது வைரஸின்  திறனைக் குறைக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.


ALSO READ | கொரோனா பரவல் எதிரொலி, ”Work From Home" முறைக்கு மாறியது உச்ச நீதிமன்றம் 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR