”வாலை” நறுக்கினால் மட்டுமே வாழலாம்; கர்ப்பம் தரிக்கவும் கடுமையான கட்டுப்பாடு

விந்தையான நிபந்தனை கொண்ட அந்த கிராமத்தின் பெயர்  'வில்லா லாஸ் எஸ்ட்ரெல்லாஸ்' (Villa las estrellas ). இந்த கிராமம் அண்டார்டிகா கண்டத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் பெரிய அளவில் வசதிகள் இல்லை என்றாலும், கடைகள், வங்கிகள், பள்ளிகள், சிறிய தபால் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 12, 2021, 06:25 PM IST
  • விந்தையான நிபந்தனை கொண்ட அந்த கிராமத்தின் பெயர் 'வில்லா லாஸ் எஸ்ட்ரெல்லாஸ்' (Villa las estrellas ).
  • குழந்தைகள் பள்ளிகளில் அடிப்படைக் கல்வியைப் பெறுகிறார்கள்.
  • மருத்துவமனைகளில் அடிப்படை சிகிச்சை மட்டுமே கிடைக்கும்.
”வாலை” நறுக்கினால் மட்டுமே வாழலாம்; கர்ப்பம் தரிக்கவும் கடுமையான கட்டுப்பாடு title=

உலகின் அனைத்து பகுதிகளிலும், அங்கு வாழும் மக்கள் அங்கிருக்கும் சட்டங்களை கடைபிடிக்க வேண்டும்.  உங்கள் சொந்த ஊரில் வசிக்க  உடலின் ஒரு பகுதியை அகற்ற வேண்டியிருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். 

விந்தையான நிபந்தனை கொண்ட அந்த கிராமத்தின் பெயர்  'வில்லா லாஸ் எஸ்ட்ரெல்லாஸ்' (Villa las estrellas ). இந்த கிராமம் அண்டார்டிகா கண்டத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் பெரிய அளவில் வசதிகள் இல்லை என்றாலும், கடைகள், வங்கிகள், பள்ளிகள், சிறிய தபால் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன. குழந்தைகள் பள்ளிகளில் அடிப்படைக் கல்வியைப் பெறுகிறார்கள். ஆனால் மருத்துவமனைகளில்  அடிப்ப்டை சிகிச்சை மட்டுமே கிடைக்கும். நவீன, மேம்பட்ட சிகிச்சை கிடைக்க வில்லா லாஸ் எஸ்ட்ரெல்லாஸ் கிராமத்திலிருந்து ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வேண்டும். 

ALSO READ | விந்தை உலகம்: சீனாவில் டிஜிட்டல் முறையில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள்

 

வில்லா லாஸ் எஸ்ட்ரெல்லாஸ் என்பது அண்டார்டிகாவில் உள்ள விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக அல்லது சிலி விமானப்படை மற்றும் இராணுவ துருப்புக்கள் வாழும் பகுதி. விஞ்ஞானிகள் மற்றூம் வீரர்கள்  தனது குடும்பத்தினரையும் இங்கு அழைத்து வந்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில், இங்கு  வாழும் மக்கள் முற்றிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதிலும்  எந்த அவசரநிலையும் ஏற்படக் கூடாது என்பதிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

குடும்பத்துடன் இங்கு தங்குபவர்கள்  குறிப்பாக இராணுவத்தில் உள்ளவர்களின்  மனைவி கர்ப்பமாக ஆக கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.  ஏனெனில் மருத்துவ வசதி இல்லாததால் எந்தவொரு பெரிய பிரச்சினையும் ஏற்படுவதை தவிர்க்கவே இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 

அப்பகுதியில் உள்ள மக்கள் அப்பெண்டிக்ஸ் பிரச்சனை, குடல் வால் அழற்சி என்னும்  அப்பெண்டிக்ஸ் (appendix ) வலி ஏற்பட்டால், அவர்களுக்கு உடனடி சிகிச்சை கிடக்காமல் அவதிப்படுவர்கள் என்பதால், குடல் வால் தேவையில்லாத பகுதி என அறிவிக்கப்பட்டு, அதை நீக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிகாவில் உள்ள இந்த கிராமம் அடர்த்தியான மக்கள்தொகை கொண்டது.  ஆண்டு முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ள இந்த பகுதிக்கு செல்ல ராஃப்டிங் படகுகளைப் பயன்படுத்த வேண்டும். வில்லா லாஸ் எஸ்ட்ரெல்லாஸ் பகுதியில் பொது போக்குவரத்து வசதிகள் இல்லை. இங்குள்ள வெப்பநிலை உறைநிலைக்கு கீழே என்ற அளவில் இருந்தாலும், அண்டார்டிகாவில் இது மிகவும் சூடான பகுதியாக கருதப்படுகிறது.

ALSO READ | Watch Viral Video: ‘குடிமகளுக்கு’ நேர்ந்த வேதனை; ஏறிய போதை நொடியில் இறங்கிய சோதனை

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News