உடலுக்கு ஆணிவேரான முதுகெலும்பு வலுவாக இருக்க... செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்...
Spine Health: உடலுக்கு ஆதாரமான முதுகெலும்பு, நம்மை தாங்கிப் பிடிக்கும் ஒரு கட்டமைப்பு. முதுகெலும்பு தான் மற்ற உறுப்புகள் சரியாக செயல்பட உதவுகிறது.
உடல் ஆரோக்கியத்திற்கு, இதயம் மூளை போன்று அதிக முக்கியத்துவம் பெற்ற உறுப்புகளில் முதுகெலும்பும் ஒன்று. நம் உடல் செயல்பாட்டின் ஆணிவேராக இருப்பது முதுகெலும்பு என்றால் மிகை இல்லை. உடலுக்கு ஆதாரமான முதுகெலும்பு, நம்மை தாங்கிப் பிடிக்கும் ஒரு கட்டமைப்பு. முதுகெலும்பு தான் மற்ற உறுப்புகள் சரியாக செயல்பட உதவுகிறது. முதுகெலும்பில் பாதிப்பு ஏற்பட்டால், அல்லது கூன் விழுந்திருந்தால், உறுப்புகள் சரியாக செயல்பட முடியாத நிலை ஏற்படும்.
இன்றைய நவீன யுகத்தில், உடல் செயல்பாடு என்பது மிகவும் குறைந்துவிட்டதோடு, ஒரே இடத்தில் அம்ர்ந்து கொண்டு வேலை செய்யும் நிலைமை உள்ளது. ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யும் போது, தசைகளுக்கு ஓய்வு கிடைக்காத காரணத்தினால், அந்த பாரத்தை முதுகெலும்பு சுமக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் முதுகெலும்பு பாதிக்கப்பட்டு, முதுகு வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி ஆகியவை ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் முதியவர்களை விட இளைஞர்களுக்கு தான், முதுகெலும்பு ஆரோக்கியம் பாதிக்கப்படுவதன் காரணமாக வரும் பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம்.
முதுகெலும்பு வலுவாக இருக்கவும், முதுகு வலி கழுத்து வலி தோள்பட்டை வலி ஏற்படாமல் இருக்கவும் கவனத்தில் கொள்ள வேண்டிய (Health Tips) சில விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
1. பணி நிமித்தமாக ஒரே நேரத்தில் அமர்ந்து கொண்டு வேலை செய்யும் நிலையில் இருப்பவர்கள், குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, சிறிது நடக்கவோ, அல்லது நாற்காலியில் அமர்ந்தவாரே நீட்சி பயிற்சியோ செய்யலாம்.
2. தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் செய்ய முடியாவிட்டால் வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்கள் உடற்பயிற்சி அவசியம். உங்களால் முடிந்த பயிற்சிகளை செய்யலாம். நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதால் ஏற்படும் உடல் பாதிப்பை சமன் செய்து, முதுகெலும்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
3. உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருப்பது அவசியம். தசைகளுக்கு போதிய நீர் கிடைக்காவிட்டால், இறுதியில் அது முதுகெலும்பை பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
4. எலும்பு வலுவாக இருக்க ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த நட்ஸ் மற்றும் விதைகள் அவசியம் சேர்க்கவும். ஏனெனில் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்தும் இதில் நிறைந்துள்ளது.
5. புரதம் நிறைந்த பருப்பு வகைகளும் முதுகெலும்புக்கு வலு சேர்க்கும். ஏனெனில் கால்சியம் மட்டும் இன்றி புரதச்சத்தும் முதுகெலும்பு ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியம்.
6. ஆரோக்கியத்தை காலி செய்து, எலும்புகளை பலவீனப்படுத்தும், சர்க்கரை நிறைந்த இனிப்பு வகைகள், சோடா பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றில் இருந்து விலகி இருப்பது நல்லது.
7. முதுகெலும்பு ஆரோக்கியமாக இருக்க நல்ல தூக்கமும் அவசியம். நாம் பயன்படுத்தும் படுக்கை தலையணை, முதுகெலும்பை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும். தவறான தோரணையில் படுப்பதால், முதுகெலும்பு பாதிக்கப் படுவதோடு முதுகு வலி கழுத்து வலி போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ