கிரீன் டீ தினந்தோறும் குடிப்பதன் புற்றுநோய் மருந்தால் மூலமாக ஏற்படும் சிறுநீரக பாதிப்பை எளிதாக தவிர்க்கலாம் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரீன் டீ எனப்படும் சுத்தமான தேயிலை கொழுந்தில் இருந்து தயாரிக்கப்படும் பொடி பிரபலமான ஒன்றாகும். இதில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடன்ட் எனப்படும் உடலுக்குத் தேவையான எதிர்ப்புச் சத்து மற்றும் புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய புரதங்கள் நிறைந்துள்ளன.


இந்த கிரீன் டீ தினசரி அருந்துவதால், உடலுக்கு பல்வேறு பயன்கள் கிடைப்பதாக ஆய்வுகளில் கூறியுள்ளனர். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், புற்றுநோயாளிகளுக்கு ஏற்படும் சிறுநீரக பாதிப்பை கிரீன் டீ அருந்துவதால் சரி ஆகும் என்று கூறியுள்ளனர்.


கிரீன் டீ இயல்பாகவே, அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு அதில் உள்ள துவர்ப்புச் சத்து மூலமாக சிறுநீரகம் கல்லீரல் போன்றவை பலம்பெறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


தேர்ந்தெடுக்கப்பட்ட எலிகளுக்கு இதனை 5 மில்லி கிராம் அளவில் கொடுத்து பரிசோதனை செய்து பார்த்ததில் அலர்ஜி மற்றும் செல்களின் இறப்பு வெகுவாகக் குறைந்ததாக இந்த சோதனையை மேற்கொண்ட மருத்துவ குழுத்தலைவர் தெரிவித்துள்ளார்.