மழைக்காலத்தில் பரவும் நோய்களில் ஒன்று டெங்கு காயச்சல். கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் நோயால் பாதிக்கப்பசுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் ஏடிஸ் கொசுக்கள் கடிப்பதால் பரவும் வைரஸ் தொற்றால் ஏற்படுகின்றது. அதிக காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல் வலி, தசை வலி, சருமத்தில் வெடிப்பு ஆகியவை டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதற்கான முக்கிய அறிகுறிகளில் அடங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெங்கு காய்ச்சலுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை தொடங்கப்படாவிட்டால், உயிரிழப்பு  ஏற்படும் அபாயம் உள்ளது. டெங்கு நோயாளிளுக்கு, இரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கும் போது, உயிருக்கு அபாயம் ஏற்படும் நிலை உண்டாகிறது. பிளேட்லெட் எண்ணிக்கை 40 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தால், ஆபத்தான ஒரு நிலையாகக் கருதப்படுகிறது.


ஆயுர்வேத நிபுணர் டாக்டர் சைதாலி ரத்தோட் (BAMS) கூறுகையில், பப்பாளி இலைச்சாறு டெங்கு நோய்க்கான அமிர்தம் போல் செயல்படும் என தெரிவித்தார்.  இந்தத் தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்துள்ளார். இதில், பப்பாளி இலைச்சாறு தயாரிக்கும் முறை, (Ayurvedic Drink To Increase Blood Platelets Count) டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவில் குணம் ஆவதற்கு மேற்கொள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கியுள்ளார்.


பப்பாளியில் உள்ள பப்பைன் என்ற என்சைம், பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. பப்பாளி இலைகளை டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட ஆரம்ப நிலையிலேயே  எடுத்துக் கொண்டால், அது அருமருந்தாக செயல்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பப்பாளி இலை காய்ச்சல் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ள தால் கல்லீரல் மற்று மண்ணீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.


பப்பாளி இலை சாறு தயாரிக்கும் முறை (How To Prepare Papaya Leaf Juice)


பப்பாளி இலைகளை நன்றாக சுத்தம் செய்து, அரைத்து பிழிந்து சாறு எடுக்க வேண்டும். பெரியவர்கள் தினமும் 10-15 மில்லி என்ற அளவிலும், குழந்தைகள் தினமும் 5 மில்லி என்ர அளவிலும் உட்கொள்ள வேண்டும். இதனால், பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.


பப்பாளி இலை சாறு அருந்துவதால் கிடைக்கும் பிற நன்மைகள்


1. கல்லீரல், மண்ணீரல் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்


2. சளி, இருமல் ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம் தொடர்பான சுவாசக் கோளாறுகள் நீங்கும்.


3. செரிமான சக்தி மேம்படும்


டெங்கு  காய்ச்சல் ஏற்பட்டால் தவிர்க்க வேண்டியவை (Foods To Avoid in Dengue Fever)


டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், சர்க்கரை, பொரித்த உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். டெங்கு நோயாளிகள் அதிக அளவு திரவங்கள், குறிப்பாக, இளநீர், பழச்சாறுகள் ஆகியவற்றை அதிகம் அருந்த வேண்டும் இதனுடன் தினமும் குளிப்பது, கூந்தலுக்கு எண்ணெய் தடவுவது, இரவில் கண் விழிப்பது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றைத் தவிர்க்கவும்.