தொப்பை கொழுப்பை கரைக்க... இந்த 4 பானங்களை குடிங்க - கை மேல் பலன் கிடைக்கும்!
Drinks For Reduce Belly Fat: குளிருக்கு இதமளித்து, உடலில் உள்ள தொப்பை கொழுப்பை கரைக்கவும் உதவும் இந்த 4 பானங்களை குளிர்காலத்தில் அடிக்கடி அருந்தினால் கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்.
Drinks For Reduce Belly Fat: குளிர்காலத்தில் நாம் பெரும்பாலும் அதிக இனிப்புள்ள பானங்களையே எடுத்துக்கொள்வோம். குளிருக்கு வெதுவெதுப்பாக இருக்க சர்க்கரை உள்ளிட்ட இனிப்புகள் கலந்த பானங்களை அதிகம் எடுத்துக்கொள்வோம். ஒருவேளை உடல் எடை குறைப்பு பயணத்தில் இருக்கிறீர்கள் என்றால், இந்த பானங்கள் உங்களின் உடலில் கொழுப்பை அதிகரிக்கவே செய்யும்.
ஆனால் அதை தவிர்த்து, இயற்கையான மற்றும் உடலுக்கு ஆரோக்கியமான சில பானங்களை குடிப்பதன் மூலம் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும். இதனால், உங்களின் கொழுப்பை கரைக்க உதவும். குறிப்பாக குளிர்காலத்தில் கொழுப்பை கரைக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகிறது. ஏனென்றால் பகல் பொழுது மிக குறைவாகவே இருக்கும்.
இரவிலும் அதிகாலையிலும் பனியின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் வீட்டிலேயே தான் அதிக நேரத்தை செலவழிப்போம். எனவே உடல் இயக்கம் மற்ற சீசன்களை விட குளிர்காலத்தில் மிகக் குறைவாகவே இருக்கும். அப்படியிருக்க, மாற்று வழிகளின் மூலம் உடல் கொழுப்பை கரைக்க முயற்சிக்க வேண்டும்
மேலும் படிக்க | குளிர்காலத்தில் உடற்பயிற்சி இல்லாமலேயே உடல் எடை குறைக்கலாம்... இதோ டிப்ஸ்..!
அந்த வகையில், குளிருக்கு இதமளித்து, கொழுப்பு கரைக்க சில பானங்களும் உள்ளன. நீங்கள் தொடர்ச்சியாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டிருந்தால் இந்த பானங்களை குடிப்பதன் மூலம் இயற்கையாகவே உங்களின் அடிவயிறு கொழுப்பும் கரையும் என்கிறார்கள். வெறும் பானங்களை மட்டும் குடிப்பது பெரியளவில் பலன் அளிக்காது என்பதையும் வாசகர்கள் மனதில் வைத்துக்கொள்ளவும். அந்த நான்கு பானங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
இலவங்கப்பட்டை மற்றும் தேன் கலந்த பானம்
இலவங்கப்பட்டையை நீரில் கோதிக்க வைத்து அதை நன்கு வடிகட்டிய பின்னர் அதில் தேன் கலந்து அருந்தலாம். இவை ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும். இதனால் கொழுப்பு ஓரிடத்தில் தங்காது, குறிப்பாக அடிவயிற்றில்... எனவே இந்த பானத்தை குளிர்காலத்தில் அடிக்கடி குடியுங்கள்.
எலுமிச்சை கலந்த கிரீன் டீ
கிரீன் டீ பெரும்பாலும் இப்போது அனைவரும் குடிக்கத் தொடங்கிவிட்டனர். அப்படியிருக்க அதில் சற்று எலுமிச்சை பழத்தை கலந்துவிட்டு அருந்தினால் அது உடல் எடை குறைப்புக்கு பெரிதும் உதவும். எலுமிச்சையை பிழிந்து கிரீன் டீயை அருந்துவதால் ருசி மட்டுமின்றி அதன் ஊட்டச்சத்தும் அதிகரிக்கும். எலுமிச்சை உங்களுக்கு வைட்டமிண் C ஊட்டச்சத்தை வழங்கும். இது செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்க உதவும். குறிப்பாக உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றவும் உதவும்.
மஞ்சள் தூள் கலந்த பால்
வீட்டில் மஞ்சள் தூள் நிச்சயம் அனைவரிடத்திலும் இருக்கும். அவை நமது பாரம்பரிய சமையலில் முக்கிய இடத்தை பிடிக்கிறது. மருத்துவ காரணங்களுக்காகவும் பல ஆண்டுகளாக மஞ்சளை நாம் பயன்படுத்திவருகிறோம். மஞ்சள் தூளில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள், ஆண்டிஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகம் இருப்பதால் தொப்பை கொழுப்பை குறைக்க இது நன்கு உதவும். மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற மூலக்கூறு கொழுப்பு திசு உருவாவதைத் தடுப்பது மட்டுமின்றி கொழுப்புகள் கரையவும் ஊக்கவிக்கும்.
இஞ்சி டீ
நாம் பெரும்பாலும் பொது இடத்தில் தேநீர் அருந்துவதை பழக்கமாக வைத்திருப்போம். எனவே சில இடங்களில் இந்த இஞ்சி டீ கிடைக்கும், சில இடங்களில் கிடைக்காது. இதனை நீங்கள் வீட்டிலேயே எளிமையாக தயார் செய்யலாம். இஞ்சி டீயும் தொப்பை கொழுப்பை குறைக்க உதவும். இஞ்சி உடலில் சூட்டை உருவாக்கும் தெர்மோஜெனீசிஸ் இயக்கத்தை ஊக்குவிக்கும், இதனால் கலோரிகள் எளிமையாக கரையும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்த கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இவற்றை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)
மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் டீடாக்ஸ் வரை... ABC ஜூஸ் செய்யும் மாயங்கள் பல
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ