புதுடெல்லி: சோம்புத் தண்ணீரை அதிகாலையில் குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக தினமும் வெறும் வயிற்றில் சோம்புத் தண்ணீரை குடித்து வந்தால், எடை குறையும், கண் பார்வை தெளிவடையும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உண்மையில், பெருஞ்சீரகம் என்றும் அறியப்படும் சோம்புத் தண்ணீர் பல உடல்நலப் பிரச்சினைகளைப் போக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படும் சோம்பு, கை வைத்தியத்தில் முக்கியமான ஒன்று. 


வயிற்று உப்புசத்தைத் தணிக்கும் சோம்பு, பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளையும் சீர் செய்கிறது.  


மேலும் படிக்க | போலி பெருங்காயத்தால் பெரிய பாதிப்பு ஏற்படும்: போலியை கண்டுபிடிப்பது எப்படி?


கண்களின் பலவீனத்தை நீக்குகிறது
சோம்புத் தண்ணீரை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். கண்களின் பலவீனத்தை நீக்கும் என்று நம்பப்படுகிறது.


சோம்பில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், கண்களின் பலவீனத்தை நீக்குவது மட்டுமல்லாமல், கண்களின் வீக்கம் மற்றும் எரிச்சலிலிருந்து நிவாரணம் அளிக்கும். எனவே தினமும் சோம்பை, தண்ணீரில் கலந்து பானமாக எடுத்துக் கொள்வது நல்லது.  


எடை குறையும்
வெறும் வயிற்றில் சோம்புத் தண்ணீரை குடித்தால், உடல் எடையை சீராக வைப்பதோடு, உடல் பருமனையும் கட்டுப்படுத்தலாம். 


மேலும் படிக்க | பச்சை இஞ்சி சாப்பிடுவதால் கிடைக்கும் பளிச் பயன்கள்


சரும பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் 
இது தவிர, தோல் பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கிறது சோம்பு. பெருஞ்சீரகம் எனப்படும் சோம்பில் உள்ள வைட்டமின் சி சருமத்தை பளபளப்பாக்குவது மட்டுமல்லாமல் கறைகளையும் நீக்கும்.


எனவே, தொடர்ந்து சோம்பை தண்ணீரில் ஊறவைத்து குடித்து வருவது ஆரோக்கியத்தை மட்டுமல்ல, அழகையும் மேம்படுத்தும்.


காலையில் எழுந்தவுடன் சோம்பு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டால், பல பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும், அதுமட்டுமல்ல, ஒரு கல்லில் இரு மாங்காய் என்பதுபோல் வெறும் வயிற்றில் குடிக்கும் சோம்பு தண்ணீர் உடல் எடையையும் குறைக்கும்.  


(பொறுப்புத்துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் பரிந்துரையாகவோ அல்லது சிகிச்சைக்கான மாற்றாகவோ இருக்க முடியாது. உங்கள் மருத்துவரின் பரிந்துரையே சாலச் சிறந்தது.)


மேலும் படிக்க | இளமை இதோ இதோ என பாட வைக்கும் சிம்பிள் பேஸ்பேக்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR