Cold Milk: குளிர்ந்த பாலில் குடிப்பதால் கிடைக்கும் சிறந்த நன்மைகள்
Cold Milk Benefits: உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா ஒரு டம்பளர் குளிர்ந்த பாலை சாப்பிட்டால் போதும் அதில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் மெட்டபாலிஷத்தை அதிகரித்து கலோரிகளை எரிக்கிறது.
குளிர்ந்த பால் ஏன் குடிக்க வேண்டும்: பசு அல்லது எருமைப் பால் அருந்துவது குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் வரை அனைவரின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. பால் ஒரு முழுமையான உணவாகும், ஏனெனில் அதில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் (புரதம், மெக்னீசியம், கால்சியம், ஜிங்க், வைட்டமின் டி மற்றும் பொட்டாசியம்) உள்ளன, அவை எல்லா வகையிலும் நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதனிடையே இப்போது நாம் சூடான பால் சிறந்ததா அல்லது குளிர்ந்த பால் சிறந்தா என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
குளிர்ந்த பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
1. உடல் எடையை குறைக்க உதவும்
உடல் எடையை குறைக்க, கடுமையான உடற்பயிற்சி மற்றும் சரியான உணவு முறைகளை நாம் நாடுகிறோம், ஆனால் பல முயற்சிகளுக்குப் பிறகும், உங்கள் தொப்பை கொழுப்பு குறைக்க முடியாமல் போய்விடுகிறது. எனவே நீங்கள் ஒரு முறை குளிர்ந்த பாலை உட்கொள்ளத் தொடங்கினால், கட்டாயம் பலனை பெறலாம். ஏனெனில் இதில் ஏராளமாக கால்சியம் உள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் உடலின் கூடுதல் கலோரிகளை எரிக்க உதவுகிறது. இது தவிர, குளிர்ந்த பால் குடித்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவும், இதன் காரணமாக எடை படிப்படியாக குறையும்.
மேலும் படிக்க | நீங்களே சமைத்து சாப்பிடுங்கள்... கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்...
2. வயிறு எரிச்சல் நீங்கும்
நீங்கள் அடிக்கடி வயிற்றில் எரியும் உணர்வை உணர்ந்தாலோ அல்லது அசிடிட்டி பிரச்சனையால் சிரமப்பட்டாலோ, குளிர்ந்த பால் உங்களுக்கு ஒரு தீர்வைத் தரும். இந்த ஆரோக்கியமான பானத்தின் மூலம் செரிமானம் மேம்படும், இன்னும் கொஞ்சம் பலன் வேண்டுமானால் பாலில் இசப்கோலை கலந்து குடித்தால், வயிற்று பிரச்சனைகளில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
3. சருமம் ஆரோக்கியமாக இருக்கும்
குளிர்ந்த பாலில் நிறைய எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன, இதன் காரணமாக உங்கள் உடல் நீரிழப்புக்கு முகம் கொடுக்க வேண்டியதில்லை. இதனால் உங்கள் சருமம் பளபளப்பாக ஆகும். இன்றைய காலத்தில் பலர் சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இத்தகைய சூழ்நிலையில், தினமும் காலையில் எழுந்ததும் குளிர்ந்த பால் குடிப்பதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மலச்சிக்கலால் பிரச்சனையா? இந்த பழம் சாப்பிடுங்க, நிவாரணம் கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ