சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்கிற பழமொழி சொல்லப்படுவதுண்டு. அதற்கு காரணம், அவ்வளவு மருத்துவ குணங்கள் சுக்கில் காணப்படுகின்றன. நன்றாக காய வைக்கப்பட்ட இஞ்சியை சுக்கு என அழைக்கிறோம். சுக்கு எளிதில் கெடாது. இதனால் உலர்ந்த இஞ்சியான சுக்கு என்பது இஞ்சியை விட அதிக நாட்களுக்கு வைத்திருந்து பயன்படுத்தலாம். சுக்கை மசாலாப் பொருளாகவோ மருந்தாகவோ அனைத்து பருவங்களிலும் பயன்படுத்தலாம். 
 ஆனால் ஆரோக்கியத்திற்கு தேவையான நன்மைகள் அனைத்தும் இதில் உள்ளது. இஞ்சியை விட சுக்கு செரிமானத்தை எளிதாகிவிடும். குடலில் ஏற்படும் பிணி, அல்சர் போன்ற பாதிப்புக்கும் சுக்கு சாப்பிடுவது நல்ல பலனை தரக்கூடியதாகும். இந்நிலையில், சுக்கு தொடர்பான சில வைத்திய குறிப்புகளை அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாட்டி வைத்தியத்தில் சுக்கின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறை:


1. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும். 


2. வெதுவெதுப்பான பாலில் சுக்கு பொடியை சேர்த்து, அதில் நாட்டுச் சர்க்கரைக் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக நோய் தொற்று குணமாகும்.


3. சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.


மேலும் படிக்க |  கலோரிகளை எரித்து உடல் பருமனை குறைக்கும் ‘ஆயுர்வேத பொடியை’ தயாரிக்கும் முறை!


4. குழந்தைகளுக்கு பசி எடுக்க வில்லை என்றாலும் வயிறு மந்தமாக இருந்தாலும் சிறிதளவு சுக்கை அரைத்து கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.


5. தலைவலியை குணப்படுத்த சுக்கை உரசி அதில் சிறிதளவு பெருங்காயதூளை சேர்த்து தலையில் தடவினால் சிறிது நேரத்திலேயே நல்ல பலன் கிடைக்கும். தலையில் இருக்கும் நீரை உறிஞ்சும் சக்தி சுக்குக்கு உள்ளது.


6. எப்போதும் வாய் துர்நாற்றம் இருப்பவர்கள் சுக்குவை சிறிதளவு பொடி செய்து அதனுடன் உப்பு சேர்த்து தினமும் பல் துலக்கி வந்தால் பல் கூச்சம் மற்றும் வாய் துர்நாற்றம் நீங்கும்.


7. எந்த வகையான உணவையும் செரிமானம் அடைய செய்துவிடும். உடலில் உள்ள நச்சுக்களை முறித்து வெளியேற்றும். குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தமாக்கும்.


8. உடல் எடையைக் குறைக்க சுக்கு மிகவும் உதவுகிறது. ஒரு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் சுக்கு பொடியை கலந்து வெதுவெதுப்பாக சூடுபடுத்தி அதில் தேன் சேர்த்து, அதனை தினமும் குடித்து வந்தால், கொழுப்பு எரிக்கப்பட்டு, உடல் எடை குறையும்


9. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும். 


10. ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சுக்குத் தூள் போட்டு நன்றாக கொதிக்கவைத்து, அதை வடிகட்டி, தேன் கலந்து தினமும் பருகி வந்தால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், மூட்டு வலி குணமாகும்.


11. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர இருமல் குணமாகும். இஞ்சி சளியை குணப்படுத்தவும் நல்ல மருந்தாக செயல்படுகிறது.  


12. இஞ்சியை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால், உடல் மற்றும் மன சோர்வு விலகி புத்துணர்ச்சி தானாக வரும்.


பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.


மேலும் படிக்க | எடையை குறைக்க சூப்பர் வழி: இந்த பழங்களுக்கு கண்டிப்பா நோ சொல்லிடுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ