பொறுக்க முடியாத காதுவலிக்கு உடனடி நிவாரணம் கொடுக்கும் 5 வழிகள்
பொறுக்க முடியாத காதுவலியால் அவதிப்படுபவர்களுக்கு உடனடி நிவாரணம் கொடுக்கும் 5 வழிகளை இங்கே தெரிந்து கொள்வோம்
காது வலி மற்ற வலிகளிலிருந்து சற்றே வித்தியாசமானது. ஏனென்றால் அது நம் மூளையை நேரடியாக பாதிக்கிறது. காது வலி இருக்கும்போது சாதாரண வேலையைக் கூட செய்ய முடியாது. இதுபோன்ற பிரச்சனைகளில் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது எப்போதும் நல்லது. ஆனால் மருத்துவ மனைக்குச் செல்ல முடியாவிட்டால், வீட்டிலேயே அதை சரிசெய்ய விரும்பினால், சில வழிகள் உள்ளன.
1. தூங்கும் முறை
காது வலிக்கு தூங்கும் முறையும் காரணம். ஒரு பக்கமாக படுத்துறங்கும்போது காதுகள் மீது அழுத்தம் அதிகமாக இருந்தால் வலி ஏற்படும். இதனை நீங்கள் கவனிக்காமல் அப்படியே படுத்து தூங்கினால் வலி மேலும் அதிகரிக்கும். அதனால் தூங்கும் நிலை மிகவும் முக்கியம். அதில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | இயற்கையான முறையில் நரை முடியை கருப்பாக்க இதை செய்தால் போதும்
2. ஐஸ் பாக்கெட்
சூடான ஒத்தனம் சில வலிகளுக்கு நிவாரணம் கொடுப்பது போல், ஐஸ்பாக்கெட்டுகளும் சில வலிகளுக்கு நிவாரணம் கொடுக்கும். அந்தவகையில் காது வலி இருக்கும்போது ஐஸ் பாக்கெட்டை குறிப்பிட்ட இடத்தில் வைத்தால் வலி சரியாக வாய்ப்புகள் உள்ளன. அதிக சூடு காரணமாக கூட வலி ஏற்பட்டிருக்கலாம். அப்படி இருந்தால் இது உங்களுக்கு உதவும்.
3. வெந்நீர் ஒத்தடம்
ஐஸ் பாக்கெட் ஒத்தடம் போலவே வெந்நீர் ஒத்தனமும் கொடுக்கலாம். காதில் ஏற்பட்டிருக்கும் சுருக்கம் காரணமாக அல்லது தசை இறுக்கம் காரணமாக கூட வலி ஏற்படலாம். இத்தகைய நேரத்தில் துணி ஒன்றை எடுத்து வெதுவெதுப்பான நீரில் நனைத்து காது மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளில் சிறிது நேரம் ஒத்தடம் கொடுக்கலாம். இது உங்களுக்கு ரிலாக்ஸைக் கொடுக்கும்.
4. ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெயின் நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். இது காது வலியையும் குணப்படுத்தும். வலி இருக்கும் சமயங்களில் காதுகளில் சில துளிகள் ஆலிவ் எண்ணெயை வைத்தால், நிவாரணம் கிடைக்கும்.
மேலும் படிக்க | உங்க உடல் எடையை குறைக்கணுமா; அப்போ இத காலை உணவாக எடுத்துக்கோங்க
5. சூயிங்கம்
பல சமயங்களில் விமானப் பயணத்தின் போது காதுகளில் கடுமையான வலி ஏற்படும். அத்தகைய நிலையில், நீங்கள் சூயிங்கம் மெல்லலாம். அவ்வாறு செய்வதன் மூலம் வலியிலிருந்து விடுபடலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR