ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ள மசூர் பருப்பின் நன்மைகள்
மசூர் தால் பெரும்பாலான வீடுகளில் உட்கொள்ளப்படுகிறது, ஆனால் அதன் நன்மைகள் உங்களுக்குத் தெரியுமா? அதன் பயனுள்ள பண்புகளைப் பற்றி பார்ப்போம்.
புதுடெல்லி: இந்திய குடும்பங்கள் பருப்பு வகைகளுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டுள்ளன. பருப்பு வகைகளைப் பற்றி நாம் பேசினால், மத்திய இந்தியாவில் மூங் பருப்பு ஆதிக்கம் செலுத்துகிறது. அதே நேரத்தில், உ.பி மற்றும் பீகாரில் துவரம் பருப்பு உண்ணப்படுகிறது. அதே நேரத்தில், பஞ்சாப் மற்றும் வட இந்தியாவில் கறுப்பு பருப்பு எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் இதற்கு மத்தியில் மசூர் பருப்பில் அதிக சுவை மற்றும் ஆரோக்கியம் மறைந்துள்ளன. மசூர் தால் பெரும்பாலான வீடுகளில் உட்கொள்ளப்படுகிறது, ஆனால் அதன் நன்மைகள் உங்களுக்குத் தெரியுமா? அதன் பயனுள்ள பண்புகளைப் பற்றி பார்ப்போம்.
சிவப்பு பருப்பு அல்லது மைசூர் பருப்பின் வகைகள்
முழு கருப்பு பயறு – இது கருப்பு நிறத்திலும் அளவிலும் மிகப்பெரிய பருப்பு ஆகும்.
உரித்த மைசூர் – இது கருப்பு பயறு வகைகளை உரிப்பதன் மூலம் பெறப்படுகிறது. இந்த பருப்பு இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.
துண்டுகளாக்கப்பட்ட பருப்பு வகைகள் – இந்த பயறு இரண்டு பகுதிகளாக அழுத்தி, துண்டுகளாக்கி பெறப்படுகிறது. இந்த பயறு சமைக்க குறைந்த நேரம் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.
மேலும் படிக்க | புற்று நோய் அண்டாமல் இருக்க ‘இந்த’ மசாலாவை உணவில் தினமும் சேர்க்கவும்!
மசூர் பருப்பு மற்றும் சிவப்பு பருப்பின் நன்மைகள்
பருப்பு பல வழிகளில் உடலுக்கு நன்மை பயக்கும். சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும் அவற்றின் அறிகுறிகளை ஓரளவிற்குக் குறைப்பதற்கும் மட்டுமே இது உதவியாக இருக்கும். இப்போது பருப்பின் நன்மைகளை கீழே பட்டியலிட்டுள்ளோம்.
1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: இந்த பருப்பில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது. இதன் நுகர்வு மூலம் ஆண்களுக்கு 87 சதவீதமும், பெண்களின் இரும்புச் சத்தை 38 சதவீதமும் பூர்த்தி செய்ய முடியும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இது தவிர, இந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
2. புரதம் கிடைக்கும்: அசைவ உணவு உண்பவர்கள் இறைச்சி மற்றும் முட்டையிலிருந்து புரதச்சத்து கிடைக்கிறது. சைவ உணவு உண்பவர்கள் முன் அதன் விருப்பங்கள் குறைவு. அதன்படி இந்த மசூர் பருப்பில் சுமார் 26 சதவீதம் புரதம் உள்ளது. இது உங்கள் புரதக் குறைபாட்டைப் பூர்த்தி செய்யும்.
3. நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்: அதிக இனிப்பு சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகள் மற்றும் ஆரோக்கியமான மனிதர்களில் இரத்த சர்க்கரை, லிப்பிடுகள் மற்றும் லிப்போபுரோட்டீன் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் திறன் இந்த சிவப்பு பருப்பு அல்லது மைசூர் பருப்பு வகைகளுக்கு உள்ளது என்று என்.சி.பி.ஐ (பயோடெக்னாலஜி தகவல் தேசிய மையம்) இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஃபிளாவனாய்டு மற்றும் ஃபைபர் உள்ளடக்கம் அதிகம் உள்ளது.
4.மூளைக்கு நன்மை: சிவப்பு பருப்பு மூளை பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்க உதவும். இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் மூளையின் இரத்த நாளங்களில் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. இது நியூரோஜெனெஸிஸை அதாவது மூளையில் புதிய திசு உருவாக்கத்தை ஊக்குவிக்கும்.
5.செரிமானத்திற்கு நல்லது: இந்த சிவப்பு பருப்பு செரிமானத்தை மேம்படுத்த உதவும். இதில் காணப்படும் நார்ச்சத்து உணவை ஜீரணிக்க பெரும்பாலும் உதவும். எனவே, இந்த சிவப்பு பருப்பை பயன்படுத்தினால் செரிமான பிரச்சினைகள் நீங்கும்.
மேலும் படிக்க | ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR