Foods To Reduce Uric Acid In Winter, Health Tips: டிசம்பர் நெருங்கிவிட்டது. இந்த குளிர்காலத்தில் அதிக உணவை எடுத்துக்கொள்வது, நீர்ச்சத்து குறைவுடன் இருப்பது, குறைந்த உடல் உழைப்புடன் இருப்பது ஆகியவை உங்கள் உடலில் யூரிக் அமிலம் அளவை அதிகப்படுத்திவிடும். யூரிக் அமிலம் அளவு உடலில் அதிகரித்துவிட்டால் மூட்டு பகுதிகளில் வலி, வீக்கம், உடல் விறைப்பு ஆகிய பிரச்னைகள் வரலாம். அதுவும் குளிர்ந்த காலநிலை இந்த அறிகுறிகளை மேலும் தீவிரமாக்கி, மூட்டு பகுதிகளை இன்னும் வலியை ஏற்படுத்தலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இறைச்சி, கடல் உணவுகள், இனிப்புகள் ஆகியவை யூரிக் அமிலம் அளவை அதிகரிக்கச் செய்யும். அலட்சியமான வாழ்க்கை முறை, போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பதும் இதில் முக்கிய பங்காற்றும். எனவே, யூரிக் அமிலத்தை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உணவுப் பழக்கவழக்கங்களில் அதிக சிரத்தை காட்ட வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். அதே நேரத்தில், உடற்பயிற்சிகளும் அவசியம் ஆகும். இது கடுமையான வலியை தடுப்பது மட்டுமின்றி, மூட்டு பகுதிகளுக்கு ஏற்படும் நீண்ட கால பாதிப்பையும் சமாளிக்கும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும். 


அந்த வகையில், இந்த குளிர்காலத்தில் இந்த 5 உணவுகளை, டயட்டில் அடிக்கடி எடுத்துக்கொள்வது மூலம் உடலின் யூரிக் அமிலம் அளவை இயற்கையாகவே குறைத்துவிடலாம். அந்த 5 உணவுகள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.


மேலும் படிக்க | உடல் பருமன் உடனே குறைய சுலபமான வழி: காலையில் இதை செய்தால் போதும்


குறைந்த கொழுப்பை உடைய பால் பொருள்கள்


பால், யோகர்ட், சீஸ் போன்றவை உடலில் யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் குறைந்த கொழுப்பை உடைய பால் பொருள்கள் ஆகும். ஏனென்றால், இவற்றில் கால்சியம், புரதச்சத்து மற்றும் லக்டல்புமின் ஆகியவை உள்ளன. இது யூரிக் அமிலம் சுரப்பதை குறைக்கும். சிறுநீரக இயக்கத்திற்கு ஆதரவளித்து, உடலில் தேவையற்ற நச்சுகளை நீக்கும். மூட்டுப் பகுதிகளுக்கு இவை ஆரோக்கியமானவையாக பார்க்கப்படுகிறது. 


சிட்ரஸ் பழஙகள்


திராட்சை, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை இந்த குளிர்காலத்தில் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமிண் C, நார்ச்சத்து, ஃபிளவோனாய்ட்ஸ் ஆகியவற்றை கொண்டிருப்பதால் வீக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும். சிறுநீரக இயக்கத்தை அதிகப்படுத்தும், யூரிக் அமிலம் சுரக்கும் அளவையும் குறைக்கும்.


பச்சிலைகள்


கீரை, பரட்டை கீரை உள்ளிட்ட பச்சிலைகளில் ஆண்டிஆக்ஸிடன்ஸ்ட்கள், நார்ச்சத்து ஆகியவை நிறைந்திருக்கும். மேலும், இவையும் வீக்கத்தை தடுத்து, சிறுநீரக செயல்பாட்டை சீராக வைத்திரு்ககும். இதனால் யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் அதுவே வெளியேறிவிடும். கீழ்வாத அறிகுறிகளையும் தடுக்கும். 


நட்ஸ்


வால்நட்ஸ், முந்திரி, பிஸ்தா, பேரீச்சம்பழம் ஆகியவை யூரிக் அமில அளவை குறைக்க உதவக்கூடியவை ஆகும். ஆண்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் இதில் நிறைந்திருக்கும். சிறுநீரக இயக்கத்தையும் சீராக வைத்திருக்க உதவும்.


முட்டைகள்


குளிர்காலத்தில் முட்டைகளை அதிகமாக எடுத்துக்கொள்வதும் யூரிக் அமில அளவை குறைக்க உதவும். இதில் புரதச்த்து, வைட்டமிண்கள், கனிமங்கள் அதிகம் இருக்கின்றன. குறிப்பாக முட்டை வீக்கத்தை குறைத்து, பியூரின் சுரப்பதை சமநிலையாக்கும். முட்டையில் உள்ள சிஸ்டைன் யூரிக் அமில படிகங்களை வெளியேற்றவும் உதவும். இதனால் கீழ்வாத அறிகுறிகள் தணியும், மூட்டுப் பகுதிகளும் ஆரோக்கியமாக இருக்கும். 


(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் ஊடக அறிக்கைகளின்படி எழுதப்பட்டவையாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News உறுதிப்படுத்தவில்லை)


மேலும் படிக்க | சிறுநீரக ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உதவும்... சில சூப்பர் உணவுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ