நாம் பஜ்ஜி போண்டா வாங்கச் சென்றால் கடைக்காரர் இவற்றையெல்லாம் செய்தித்தாளில் சுற்ற வைத்து பேக் செய்து கொடுப்பதை அடிக்கடி பார்த்திருப்பீர்கள். இது மிகவும் மோசமான பழக்கம் மற்றும் ஆரோக்கியத்திற்கு கடுமையான தீங்கு விளைவிக்கும். நாடெங்கிலும் உள்ள செய்திகளை அறிய மக்கள் செய்தித்தாள்களைப் படிக்கிறார்கள், இந்த செய்தித்தாள்கள் பழையதாக மாறும் போது, ​​​​சிலர் வேறு சில தேவைகளுக்கு அவற்றைப் பயன்படுத்துகிறார்கள், நீங்களும் இதைச் செய்திருக்கலாம், சிலர் இந்த பழைய செய்தித்தாள்களில் உணவு பொருட்களை பேக் செய்து கொண்டு செல்லும் பழக்கம் இருக்கும். சிலர் சிந்திய உணவுப் பொருட்களை சுத்தம் செய்ய நாளிதழ்களை பயன்படுத்துகின்றனர். சுத்தம் செய்யும் பயன்படுத்துவது வரை பரவாயில்லை, ஆனால் செய்தித்தாளில் பேக் செய்யப்பட்ட உணவு உண்பது உடல் நலத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கும் என்று சமீபத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் FSSAI கூட எச்சரிக்கை விடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ( FSSAI) தலைமை நிர்வாக அதிகாரி கமலவர்தன் ராவ், உணவுக்காக செய்தித்தாளைப் பயன்படுத்துபவர்கள் அதிகமாகி வருவது குறித்து கவலை தெரிவித்ததோடு, அதனால் ஏற்படும் உடல் நலக் கேடுகளைக் காரணம் காட்டி, செய்தித்தாள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். கமலவர்தன் இது குறித்து கூறுகையில், செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் மையில் பல ஆபத்தான இரசாயனங்கள் உள்ளன.  இது உங்களை பல கடுமையான நோய்களுக்கு ஆளாக்குகிறது, அதன் மற்ற சில தீமைகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.


செய்தித்தாளில் பேக் செய்யபப்ட்ட உணவு உண்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன? ( Side effects of wrapping food in newspaper)


செய்தித்தாள் மையினால் ஏற்படும்  தீமைகள்


செய்தித்தாளில் அச்சடிக்கப் பயன்படும் மை பல வகையான ரசாயனங்களால் ஆனது, நீங்கள் செய்தித்தாளில் பேக் செய்யப்பட்ட உணவை உண்ணும் போது, ​​உங்கள் உணவுடன் உங்கள் வயிற்றுக்குள் அச்சிடப்பட்ட மை செல்கிறது, இது உங்கள் ஆரோக்கியத்திற்கு (Health Tips) தீங்கு விளைவிக்கும். தொடர்ந்து உட்கொள்வது பல கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.


செரிமான பிரச்சனைகள்


செய்தித்தாள்கள் தயாரிக்கப் பயன்படும் காகிதம் மற்றும் மை உண்பதற்காகத் தயாரிக்கப்பட்டது அல்ல, அதைச் சாப்பிட்டால், செரிமானக் கோளாறுகள் அதிகம். செய்தித்தாளில் பேக் செய்யப்பட்ட உணவை உண்பதால் வாயு மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.


மேலும் படிக்க | வெங்காயம் சாப்பிட்டால் இதய பிரச்சனைகள் உட்பட கிடைக்கும் நன்மைகள்!


இரசாயன பரிமாற்றம்


செய்தித்தாளில் உணவு உண்ணும் போது, ​​நாளிதழ் மற்றும் நாளிதழில் உள்ள இராசாயனங்கள் உணவில் கலந்து, அவை உணவை மாசுபடுத்துகின்றன, அவை நம் உணவை மட்டுமல்லாது, சுற்று சூழலையும் மாசுபடுத்துகின்றன, மேலும் உணவுடன் நம் உடலில் சேருகின்றன, இது பல வகையான நோய்களை ஏற்படுத்துகிறது. நோய்களை ஊக்குவிக்கிறது. எனவே, இந்த பழக்கத்தை இன்றே விட்டு விடுங்கள்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | தினமும் ‘இதை’ செய்தால் இரத்த அழுத்தம் சீராகும்..செய்து பாருங்களேன்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ