கழுத்துவலி பாடாய் படுத்துகிறதா... ‘இதை’ செய்தால் போதும்!

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து கணிணியில் வேலை செய்யும் நபர்களுக்கும், மொபைலில் நீண்ட நேரம் மூழ்கி போகிறவர்களுக்கும், கழுத்து வலி பெரும் பிரச்சனையாகி வருகிறது.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், கழுத்துவலி பிரச்சனை ஏற்படுகிறது. அதே போன்று நீண்ட நேரம் தலையை சாய்த்து, மொபைல் விளையாடும் நபர்கள், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து கணிணியில் வேலை செய்யும் நபர்கள் இந்த பிரச்சனைக்கு பலியாகிறார். எனவே, கழுத்தில் விறைப்பு தன்மை, கழுத்துமுதுகெலும்பு வலி, தோள்பட்டை வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படத் தொடங்குகின்றன. முதுகுத் தண்டும் பலவீனமடையத் தொடங்குகிறது, பகலில் மட்டுமல்லாது இரவில் தூங்கும் போதும் கழுத்து வலி, முதுகுவலி பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதைப் புறக்கணிப்பது உங்களுக்கு ஆபத்தானது. இந்த பிரச்சனையிலிருந்து விடுபட பலர் வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். இதற்கான சில வீட்டு வைத்தியங்கள் மற்றும் பயிற்சியின் உதவியுடன் வலியை பெருமளவில் கட்டுப்படுத்தலாம்.
கழுத்து பயிற்சி
பல நேரங்களில் கழுத்தின் பின் பகுதியில் வலி தீவிரமடைந்து இது தாங்க முடியாததாகிறது. இதற்கு கழுத்து பயிற்சிகளை செய்வதை வழக்கமாக்கிக் கொள்வது நிவாரணம் தரும். முதுகை வளைக்காமல் நேராக நின்று கொண்டு, கழுத்தை ஒரு முறை இடது பக்கமாகவும் பின்னர் வலது பக்கமாகவும் மாறி மாறி அசைக்க வேண்டும். இதை 5-8 முறை செய்யவும், ஒரு நாளைக்கு காலை மாலை இரு நேரமும் இதனை செய்யவும்.
மேலும் படிக்க | Brain Health: மூளையை பாதிக்கும் ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க
தோள் பயிற்சி
நமது மூளையின் நரம்புகள் வழியாக உடல் முழுவதும் பரவுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், கழுத்துவலி ஏற்படும் போதெல்லாம், நேராக நின்று கொன்று, உங்கள் தோள்களின் மேல் பகுதியை வட்ட இயக்கத்தில் சுழற்றவும். இதை 5 முறை எதிர்நோக்கியும், 5 முறை மேலே பார்த்தும் செய்ய வேண்டும். இந்த பயிற்சியை ஒரு நாளைக்கு 3 முறை செய்யவும்.
நாற்காலியில் உக்கார்ந்த நிலையில் பயிற்சி
இந்தப் பயிற்சியைச் செய்ய, நாற்காலியில் நேராக உட்கார்ந்து, உங்கள் கைகளை இரு முழங்கால்களிலும் வைத்து வலது மற்றும் இடது பக்கம் அசைக்கவும். இதனால், நரம்புகளுக்கு பயிற்சி கிடைத்து, வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
கழுத்து பயிற்சி
இந்த பயிற்சியை தினமும் காலையில் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், கழுத்து வலி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். மேலும், கழுத்துவலி உள்ளவர்களுக்கு இது ஒரு சஞ்சீவி பயிற்சி. இதற்கு இரு கைகளையும் தலைக்கு மேல் வைத்து மெதுவாக கும்பிட வேண்டும். முதலில் வலது பக்கம் சாய்ந்து பின் இடது பக்கம் சாய்க்கவும். இந்த பயிற்சியை சுமார் 10-12 முறை செய்யவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ