வாயு பிரச்சனைக்கு குட் பை செல்ல... இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் கை கொடுக்கும்...
Home Remedies To Get Rid of Acidity, Gas Problem: வயிற்றில் உருவாகும் வாயு பிரச்சனை என்பது, சாதாரண பிரச்சனை என்று ஒதுக்கி விட முடியாது. இதனால், சில சமயத்தில் கடுமையான வயிற்று வலி, தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
வாயுத் தொல்லை தானே என சாதாரணமாக நினைத்து விட முடியாது. நம்மை நிம்மதியாக இருக்க முடியாமல் செய்யும் இந்த வாயுத் தொல்லை வந்தாலே வயிற்றுக்கு சிக்கல் தான். சில பேருக்கு இதனால் வயிற்றில் வலி, வயிறு வீக்கம், வயிற்று உப்பிசம், நெஞ்செரிச்சல், ஏப்பம் என மாறி மாறி ஏதோ ஒன்று இம்சையை கொடுத்துக் கொண்டே இருக்கும். இன்றைய மோசமான உணவுப் பழக்கம் காரணமாக வாயு பிரச்சனை, ஆசிடிட்டி என்பது பெரும்பாலானோருக்கு இருக்கிறது.
துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு பஞ்சமில்லை. சாப்பிடும் போது சுவை நன்றாகத் தான் இருக்கும். ஆனால் இவை அனைத்தும் செரிமானத்தை பாதித்தும் ஆரோக்கியத்திற்கு கடுமையான தீங்கு விளைவிக்கும். இதை தொடர்ந்து உட்கொள்வதால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதால் வாயுவை உண்டாக்கும். வாயுத் தொல்லையை போக்க உங்கள் சமையலறைப் பொருட்களை உபயோகித்தால் (HealthTips) போதும். வாயுத் தொல்லை காணாமல் போகும்.
வாயு தொல்லையிலிருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்கள்
ஓமம் நீர்
ஓம விதைகள் தைமோல் என்ற ஜீரணத்திற்கு உதவவும் நொதியை தூண்டுகிறது. இதனால் வாயுப் பிரச்சனை இருப்பவர்கள் 1/2 டீ ஸ்பூன் ஓம விதைகளைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, தினமும் குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
சீரக நீர்
சீரகத்தை தண்ணீரில் போட்டு 10-15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, இந்த தண்ணீரை வடிகட்டி அதனை தொடர்ந்து சாப்பிட்டு வர வாயுத் தொல்லை விரைவில் நீங்கி விடும்.
வெதுவெதுப்பான நீர்
அடிக்கடி வாயு பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள், வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதைப் பழக்கப்படுத்திக் கொள்வது பலன் அளிக்கும். இது வாயு உருவாவதைத் தடுக்கும். வெந்நீர் குடிப்பது செரிமான செயல்முறையை துரிதப்படுத்துகிறது. செரிமானம் சிறப்பாக இருந்தாலே வாயுத் தொல்லை ஏற்படாது.
மேலும் படிக்க | ஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறையணுமா.... உங்களை ஏமாற்றாத டயட் பிளான் இதோ
எலுமிச்சை இஞ்சி பானம்
வாயு பிரச்சனையிலிருந்து விடுபட எலுமிச்சை இஞ்சி சேர்த்த பானம் உதவும். இஞ்சி செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும் ஆற்றல் கொண்டது.
உணவை நன்றாக மென்று சாப்பிடுதல்
சாப்பிடும் போது உணவை நன்றாக மென்று சாப்பிடுவது நல்லது. நன்றாக மென்று சாப்பிடும் போது, உமிழ்நீர் நன்றாக உணவுடன் கலந்து, செரிமானம் சிறப்பாக இருக்கும். அவ்வாறு செய்வதன் மூலம் வாயு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
சுடு நீர் ஒத்தடம்
வயிற்றில் வாயு அதிகமாகும் போது, ஒரு சூடான தண்ணீர் நிரப்பிய பையை எடுத்து வயிற்றின் மீது ஒத்தடம் கொடுப்பதும் பயன் தரும், சுடு நீரில் நனைத்த சூடான டவலைப் பயன்படுத்தியும் ஒத்தடம் கொடுக்கலாம். இந்த சிகிச்சையின் மூலம் இரைப்பை அழற்சி பிரச்சனை உடனடியாக நீங்கும்.
வஜ்ராசனம்
வாயு பிரச்சனை முற்றிலும் நீக்க யோகா பயிற்சியும் பலன் தரும். வஜ்ராசன தோரணையில் அமர்வதால், செரிமானம் சிறப்பாக இருக்கும். இந்த ஆசனத்தை தினமும் குறைந்தது 15 நிமிடங்களாவது செய்து வந்தால், செரிமான மண்டலம் மிகவும் வலுவடையும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | கொழுப்பு கரைய, எடை குறைய, இந்த காலை உணவுகள் கைகொடுக்கும்: ட்ரை பண்ணி பாருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ