வயது அதிகரிக்கும் போது மூட்டுகளில் பலவீனம் ஏற்படுவது சகஜம். மூட்டுகள் தேய்மானம் காரணமாக வயதானவர்களுக்கு மூட்டு வலி ஏற்படுகிறது என்றாலும், தற்போதை வாழ்க்கை முறை காரணமாக இளம் வயதினருக்கும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் 40 வயதைக் கடந்தவர்களுக்கு கூட மூட்டுவலி வருவதை காணாலாம். உடலில் கால்சியம் சத்து குறைவதும், உடல் பருமனும் இதற்கான பிற முக்கிய காரணங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூட்டு வலியைக் குறைக்க நம்மில் பலர் பல்வேறு வகையான களிம்புகள் மற்றும் கிரீம்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் வீட்டு வைத்தியம் மூலம் இயற்கையான முறையில் வலியைக் குறைப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் பக்க விளைவுகள் எதுவும் கிடையாது. 


மஞ்சள் மற்றும் பால்


மஞ்சளில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது மூட்டு வலியைக் குறைக்க உதவுகிறது. ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தூய மஞ்சள் தூள் கலந்து கொதிக்க வைத்து குடித்து வந்தால், உடலில் ஏற்படும் வீக்கம் குறையும். இதை தினமும் காலையிலும் மாலையிலும் குடித்து வந்தால், (Health Tips) நல்ல நிவாரணம் பெறலாம்.


கடுகு எண்ணெய் மற்றும் பூண்டு


மூட்டு வலிக்கு கடுகு எண்ணெய் நீங்கள் நம்ப முடியாத அளவிற்கு மிகவும் வியக்கத் தக்க வகையில் நிவாரணம் கொடுக்கும். 2 முதல் 3 ஸ்பூன் கடுகு எண்ணெயில் 2 பல் பூண்டை சேர்த்து சூடாக்கி, பின், இந்த எண்ணெயைக் கொண்டு வலி உள்ள இடங்களில் மசாஜ் செய்யவும். மேலும் கடுகு எண்ணெய் கதகதப்பைக் கொடுக்க கூடியது என்பதால், வலிக்கு மிக இதமாக இருக்கும்.


இஞ்சி


இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலியைக் குறைக்கும். இஞ்சி டீ அல்லது இஞ்சியை துருவி தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடிப்பது நன்மை பயக்கும். இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவலாம்.


மேலும் படிக்க | மூளை - நரம்பு ஆரோக்கியத்தை காக்கும் கோலின் சத்து... நிறைந்த சில உணவுகள்


எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய்


எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய் கலவையைப் பயன்படுத்துவது மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயில் கலந்து வலி உள்ள இடத்தில் மசாஜ் செய்யவும். . இந்த கலவை உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதை தினமும் பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


கொத்தமல்லி


கொத்தமல்லி இலைகள் மருத்துவ குணங்களின் களஞ்சியம். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும். உங்கள் கொத்தமல்லி இலைகளை ஜூஸாக அல்லது கஷாயமாக உட்கொள்ளலாம். இதனால் மூட்டு வலியிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். இதில் உள்ள பொட்டாசியம், தயாமின், வைட்டமின் சி போன்ற பல ஊட்டச்சத்துக்கள் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்


சூடான நீரினால் ஒத்தடம் கொடுத்தல்


சூடான நீரினால் ஒத்தடம் கொடுத்தல் ஒரு எளிய தீர்வு. சுத்தமான துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து பிழிந்து வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும். இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | LDL கொழுப்பை எரித்து... மாரடைப்பை தடுக்க... உதவும் சில எளிய பழக்கங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ