வாழைப்பழம் நீண்ட நாள் அழுகாமல் இருக்க வேண்டுமா... சில எளிய டிப்ஸ்!
பொதுவாக வீட்டில் வாழைப்பழம் சாப்பிடாதவர்கள் மிகவும் அரிது. மிகவும் மலிவானது என்பதோடு, ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. ஆனால் வாழைப்பழங்களை அழுகாமல் அதை எவ்வாறு காப்பாற்றுவது என்பது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது.
பொதுவாக வீட்டில் வாழைப்பழம் சாப்பிடாதவர்கள் மிகவும் அரிது. மிகவும் மலிவானது என்பதோடு, ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. ஆனால் வாழைப்பழங்களை அழுகாமல் அதை எவ்வாறு காப்பாற்றுவது என்பது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. மார்கெட்டில் வாழைப்பழம் வாங்கும் போது, அதை எப்படி நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாக வைத்திருப்பது என்பதுதான் பெரிய டென்ஷன். அதுவும் கோடை காலத்தில் மிக சீக்கிரம் அழுகி விடும். ஆனால் சில எளிய வழிகளை பின்பற்றுவதன் மூலம் வாழைப்பழத்தை நீண்ட நாட்களுக்கு பிரெஷ்ஷாக வைத்திருக்க முடியும்.
வாழைப்பழத்தை ஒரு வாரத்திற்கு பிரெச்ஷாக வைத்திருக்க சில டிப்ஸ்:
வாழைப்பழ ஹேங்கர்கள்
வாழைப்பழம் அழுகாமல் பாதுகாக்க, அதனை தொங்கவிடும் வகையில் ஹேங்கர்களை சந்தையில் இருந்து வாங்கி, அதில் வாழைப்பழத்தை தொங்கவிடவும். வாழைப்பழம் நீண்ட நாட்களுக்கு பிரெஷ்ஷாக இருக்கும். வாழைப்பழத்தை தொங்க விடும் ஹாங்கர்கள் ஸ்டீலிலும், மரத்திலும் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை ஆன் லைன் தளங்களிலும் வாங்கலாம்.
மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!
வேக்ஸ் பேப்பர்
வாழைப்பழத்தை பிரெஷ்ஷாக வைத்திருக்க இந்த வேக்ஸ் பேப்பரை பயன்படுத்தலாம். இதற்காக, வாழைப்பழத்தை மெழுகு காகிதத்தினால், சுற்றி அதனை முழுமையாக மூடி வைக்கலாம்.
வாழைப்பழம் அதிக நாட்கள் அழுகாமல் இருக்க வேண்டுமானால், அதன் தண்டு பகுதியில் பிளாஸ்டிக் அல்லது செல்லோ டேப்பை சுற்றி மூடி வைட்த்ஹால் னால், வாழைப்பழம் நீண்ட நாட்கள் பிரெஷ்ஷாக இருக்கும்.
வாழைப்பழத்தை பிரெஷ்ஷாக வைத்திருக்க வைட்டமின் சி மாத்திரையை தண்ணீரில் கலந்து அதில் வாழைப்பழத்தை போட்டு வைக்கவும்.
பொதுவாக உணவை ஃப்ரெஷ்ஷாக வைக்க ஃப்ரிட்ஜ் பயன்படுத்துகிறோம் ஆனால் வாழைப்பழத்தை ஒரு போதும் பிரிட்ஜில் வைக்க கூடாது. சாதாரண அறை வெப்பநிலையில் வைக்கவும்.
(பொறுப்பு துறப்பு : இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் வீட்டுக் குறிப்புகள் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இதற்கு பொறுப்பேற்காது)
மேலும் படிக்க | Health Alert: முட்டையுடன் சாப்பிடக் கூடாத சில உணவுகள்
மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ