இ-சிகரெட் சொல்லப்படும் எலெக்ட்ரானிக் சிகரெட் புகைப்பது ஆரோக்கியமானது என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த சிகரெட் புகைப்பது ஈறுகளையும் மற்றும் பற்களையும் பாதிக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு முன்பதாக நடத்தப்பட்டு வந்த ஆய்வுகளில் குடிப்பழக்கத்திற்கும், புகைப்பழக்கத்திற்கும் வலுவான தொடர்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் ஆரோக்கியம் என கூறப்பட்டு வந்த இ-சிகரெட்டை தொடர்ந்து உபயோகித்தால் அவை நமது ஈறுகளையும் மற்றும் பற்களையும் பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இ-சிகரெட் புகைப்பவர்கள் அதிக அளவில் குடிப்பழக்கத்திற்கு ஆளாகுவதோடு பற்களையும் அது பாதிக்கும் என தெரியவந்துள்ளது. இ-சிகரெட்டுடன் சேர்த்து மதுவை அருந்தினால் குடிப்பழக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.


புகைப்பிடிப்பதை குறைக்க வேண்டும் என எண்ணுபவர்கள் ஆரோக்கியமான இ-சிகரெட்டை பயன்படுத்துகின்றனர்.


மேலும், இந்த ஆய்வின் அறிக்கையில் இ-சிகரெட் புகைப்பவர்களில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் என தெரியவந்துள்ளது.


இ-சிகரெட்டில் ஆபத்தில்லை என கருதி பெண்களும் அதிக அளவில் இ-சிகரெட்டை பயன்படுத்தி வருகின்றனர் என்று ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.