Fruits for Health: ஆற்றலைக் கொடுக்கும் பழம் அற்புதமான திராட்சைப்பழம்
திராட்சைப்பழங்களில் சில இனிப்பாக இருந்தால், ஒருவகை புளிப்பாக இருக்கும். அதேபோல, கொட்டை உள்ளதாகவும், கொட்டை இல்லாததாகவும் பலவகைகளில் கிடைக்கிறது திராட்சை
உடலுக்கு சக்தி தேவைப்படும்போது உடனடியாக உடனடியாகத் தெம்பு கொடுப்பது திராட்சை பழம். வெளிநாடுகளில் விளைந்த திராட்சை, முகலாய அரசர்களின் வருகையின்போதுதான் இந்தியாவின் அறிமுகமானது என்றாலும், இந்தியாவின் தட்பவெப்ப நிலையில் திராட்சை செழித்தோங்கியது.
அடிப்படையில் கறுப்பு நிறத்தைக் கொண்ட திராட்சை, காலப்போக்கில், இடம், தட்பவெட்பம், மண் என பல்வேறு காரணங்களினால், சுவைகளில் மாறுபாட்டுடன் விளையத் தொடங்கியது.
திராட்சைப்பழங்களில் சில இனிப்பாக இருந்தால், ஒருவகை புளிப்பாக இருக்கும். அதேபோல, கொட்டை உள்ளதாகவும், கொட்டை இல்லாததாகவும் பலவகைகளில் கிடைக்கிறது திராட்சை.
திராட்சையில் விட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ் என பல்வேறு சத்துக்கள் இருக்கும் திராட்சையில் க்ளுக்கோஸ் அதிக அளவில் உள்ளது.
READ ALSO | புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்களுக்கு அருமருந்தாகும் பழம்!
இனிப்பாக இருக்கும் திராட்சையில் க்ளுக்கோஸ் மாவுச்சத்து அதிகம் இருக்கிறது. திராட்சையில் டார்டாரிக் மற்றும் பெக்டின் என சில அமிலங்களும் இருக்கின்றன.
உடல் எடை (Body Weight) குறைவாக உள்ளவர்களும், பலவீனனானவர்களும் திராட்சையை சாப்பிட்டு பயனடையலாம். திராட்சையில் க்ளுக்கோஸ் சத்து அதிகம் இருப்பதால், சாப்ப்பிட்ட உடனே உடனடியாகத் தெம்பு கிடைக்கும்.
மலமிளக்கியாகவும் திராட்சைப் பழம் செயல்படுகிறது. கடுமையான மலச்சிக்கலால் சிரமப்படுபவர்களுக்கு உலர்ந்த திராட்சை அருமருந்து. இரவில் உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து, காலையில் உட்கொண்டால் மலம் இயல்பாக கழிவதுடன், வயிறு, குடல் ஆகியவற்றை ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது திராட்சை.
உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவும் திராட்சை, புற்றுநோயிலிருந்து பாதுகாக்க வல்லது. உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், திராட்சைப்பழம் உகந்தது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், தலைமுடி உதிராமல் இருப்பதற்கும், சரும பராமரிப்புக்கும் திராட்சைப் பழத்தை உண்பது நல்ல பலன் தரும்.
ALSO READ | வில்வப் பழத்தில் இத்தனை நன்மைகளா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR