தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபட... ‘இந்த’ ஊட்டசத்துக்கள் அவசியம் தேவை!
தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் இரண்டுமே தீங்கு விளைவிக்கும். தைராய்டை மேம்படுத்த அயோடின் மட்டுமே தேவை என்று பலர் நினைக்கிறார்கள்.
தைராய்டு என்பது கழுத்தில் ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி. இது வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த வேலை செய்கிறது. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் இரண்டுமே தீங்கு விளைவிக்கும். தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் தைராய்டு பிரச்சனையை அதிகரிக்கின்றன. தைராய்டு நோய்களில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. அவை ஹைப்போ தைராய்டிசம் என்னும் குறைவான ஹார்மோன்கள் உற்பத்தி நிலை, மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் என்னும் அதிக ஹார்மோன்கள் உற்பத்தி நிலை ஆகும். தைராய்டை மேம்படுத்த அயோடின் மட்டுமே தேவை என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், இந்த ஹார்மோனுக்கு 5 அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தேவை.
உடலில் அயோடின் மட்டிமின்றி வேறு சில ஊட்டச் சத்துக்கள் குறைபாடு இருந்தாலும் தைராய்டு ஹார்மோன் சரியாக செயல்படாது. உடலில் தைராய்டு ஹார்மோன் குறைபாடு காரணமாக, எரிச்சல், சோர்வு, எடை இழப்பு அல்லது உடல் பருமன் போன்ற பிற பிரச்சனைகள் தொடங்குகிறது. இது தவிர, பதட்டம், தூக்கமின்மை, கை நடுக்கம், அதிக வியர்வை, இதயத் துடிப்பு அதிகரிப்பு, முடி உதிர்தல், தசை பலவீனம் மற்றும் வலி, மனநிலையில் அடிக்கடி மாற்றங்கள் ஆகியவை இதில் அடங்கும். எனவே தைராய்டை கட்டுப்படுத்த அல்லது சீரமைக்க எந்தெந்த சத்துக்கள் தேவை என்பதை தெரிந்து கொள்வோம்.
தைராய்டு செயல்பாட்டை அதிகரிக்க தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்:
1. அயோடின்:
அயோடின் தைராய்டு செயல்பாட்டிற்கு முக்கியமானது, ஏனெனில் இது தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது. ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகையில், "டிரையோடோதைரோனைன் (டி3) மற்றும் தைராக்ஸின் (டி4) ஆகியவை அயோடின் கொண்ட தைராய்டு ஹார்மோன்கள். எனவே அயோடின் குறைபாடு தைராய்டு நோயை ஏற்படுத்துகிறது" என்றார்.
2. வைட்டமின் டி:
வைட்டமின் டி குறைபாடு எலும்பு ஆரோக்கியத்தை மட்டுமல்லாது தைராய்டு சுரப்பியையும் பாதிக்கிறது. இந்த வைட்டமின் அளவு குறையும் போது ஹஷிமோட்டோவின் தைராய்டிடிஸ் மற்றும் கிரேவ்ஸ் நோய்க்கு வழிவகுக்கிறது.
3. செலினியம்:
ஊட்டச்சத்து நிபுணர் லாவ்னீத் பாத்ராவின் செலினியம் சத்து குறித்து கூறுகையில், தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு செலினியம் தேவைப்படுகிறது. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் ஏற்படும் சாத்தியமான சேதத்திலிருந்து தைராய்டைப் பாதுகாக்க உதவுகிறது."
4. துத்தநாகம்:
தைராய்டு சுரப்பியின் சரியான செயல்பாட்டிற்கு அவசியமான மற்றொரு தாது துத்தநாகம் ஆகும், ஏனெனில் இது தைராய்டு ஹார்மோன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. T3, T4 மற்றும் தைராய்டு-தூண்டுதல் ஹார்மோன் (TSH) ஆகியவற்றின் சரியான சீரம் அளவை பராமரிப்பதற்கும் துத்தநாகம் அவசியம் தேவை.
மேலும் படிக்க | தொப்பையை கரைக்கணுமா.. இந்த ‘7’ விதிகளை கடைபிடியுங்க.... அதுவே போதும்!
5. இரும்புசத்து:
தைராய்டு சுரப்பிக்கு "T4 ஐ T3 ஆக மாற்ற" இரும்பு தேவைப்படுகிறது, இது தைராய்டு ஹார்மோனின் செயலில் உள்ள வடிவமாகும். கூடுதலாக, இரும்புச்சத்து குறைபாடு தைராய்டு செயலிழப்புடன் தொடர்புடையது.
தேவையான பிற ஊட்டச்சத்துக்கள்
பி வைட்டமின்கள், தாமிரம் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ ஆகியவை தைராய்டு சுரப்பியின் உகந்த செயல்பாட்டிற்கு அவசியமான வேறு சில ஊட்டச்சத்துக்கள். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பது தைராய்டு ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும் மற்றும் தைராய்டு நோய் அபாயத்தை அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.
மேலும் படிக்க | ஆர்வ கோளறுல வெந்நீர் அதிகம் குடிக்காதீங்க... கிட்னி காலியாகிவிடும்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ