Side Effects of High Protein Diet: புரதச்சத்து நம் உடலுக்கு மிகவும் இன்றியமையாத ஒரு சத்து. மனித உடலுக்கு தேவையான மூன்று முக்கிய நுண்ணூட்டச் சத்துக்களில் புரோட்டீனும் ஒன்று. உடல் முழுவதும், ஆக்சிஜனை கொண்டு செல்ல புரதச்சத்து மிக அவசியம். போதுமான புரதச்சத்து இல்லை என்றால், உடல் வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்கப்படும். அது மட்டுமல்ல சோர்வு, மூளை பாதிப்பு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சை என்ற பழமொழி நம் எல்லோருக்குமே தெரிந்திருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சராசரி மனிதருக்கு தேவையான புரத சத்தின் அளவு


புரதச்சத்து மிக அவசியம் என்றாலும் அளவிற்கு அதிகமாக போனால் அது ஏற்படும் பாதிப்பு அதிகம். ஒரு நபரின் உடல் எடையில், ஒவ்வொரு கிலோவிற்கும் ஒரு கிராம் புரோட்டீன் தேவை என்று கூறப்படுகிறது. உதாரணத்திற்கு ஒருவர் 60 கிலோ எடை உள்ளவர் என்றால், அவருக்கு சராசரியாக தினம் அறுபது கிராம் புரோட்டின் தேவை. இருப்பினும் புரோட்டீன் தேவை என்பது, ஒருவரது வயது, பாலினம் மற்றும் இதர உடல்நிலை (Health Tips) குறித்து, சிறிய அளவில் மாறுபடும்.


நாளொன்றுக்கு தேவையான புரோட்டீன் அளவு


பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு, 19 முதல் 34 கிராம் புரதம் தேவைப்படும். அதேபோன்று, பதின்ம வயது கொண்ட ஆண்களுக்கு 52 கிராம் புரதமும், பதின்ம வயதில் இருக்கும் பெண்களுக்கு 46 கிராம் புரதமும் தேவை என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். வயது வந்த ஆண்களுக்கு, 56 கிராம் புரதமும், இந்த பெண்களுக்கு சுமார் 46 கிராம் புரதமும் தேவைப்படும். எனினும் கர்ப்பிணி அல்லது பாலூட்டும் தாய்மார்களுக்கு, நாள் ஒன்றுக்கு சுமார் 71 கிராம் புரதம் தேவைப்படும்.


மேலும் படிக்க | ஓமவல்லிக்குள் இருக்கும் நல்ல குணங்கள் என்ன? பல நோய்களுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி!


அளவிற்கு அதிகமாக புரோட்டீன் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்:


1. அதிக புரோட்டீன் உணவுகளை உட்கொள்வதால் சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.


2. அதிக புரதம், அஜீரண பிரச்சனைகளை ஏற்படுத்தி வாயில் துர்நாற்றம், நீரிழப்பு சக்தி ஆகியவற்றை ஏற்படுத்தும்.


3. அதிக புரோட்டீன் டயட் காரணமாக இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.


4. அளவிற்கு அதிக புரதம் காரணமாக பெருங்குடல் புற்றுநோய் கூட ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.


5. புரதக் குறைபாடு சோர்வை ஏற்படுத்துவது போலவே, அளவிற்கு அதிகமான புரதம் மனச்சோர்வை ஏற்படுத்தும். மன அழுத்த ஹார்மோன்கள் அதிகரிப்பதே இதற்கு காரணம்.


6. புரத உணவுகளை செரிக்க வைக்க அதிக தண்ணீர் தேவை என்பதால், அளவிற்க்கு அதிகமான புரோட்டீன் உடலுக்கு நீர் இழப்பை ஏற்படுத்தும்.


7. உடல் எடை குறைய புரதச்சத்து அவசியம் என்றாலும், அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது, உடல் எடை இழப்பதற்கு பதிலாக, உடல் எடை அதிகரிப்பதற்கு வாய்ப்பு உண்டு.


புரதம் நிறைந்த உணவுகள்


முட்டை, முழு தானியங்கள் பருப்பு வகைகள், சோயா உணவுகள், பன்னீர், பால் பொருட்கள் போன்றவற்றில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது. அதோடு, இறைச்சி உணவுகளில் புரத சத்து அதிகம் உள்ளது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஒல்லி பெல்லி வேணுமா? எடை குறையணுமா? வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க போதும்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ