கண்ணுக்கு நல்லதுன்னு Vitamin A கண்டபடி சாப்பிடாதீங்க.. பேராபத்து!
Vitamin A Side Effects: வைட்டமின் ஏ மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து என்பதில் சந்தேகமில்லை, இது நம் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆனால் அதன் அதிகப்படியான அளவு எதிர் விளைவையும் ஏற்படுத்தும்.
உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதால் பலவகையான நோய் பிரச்சனைகளை நாம் சந்திக்க வேண்டி வரும். எனவே நாம் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வைட்டமின்கள் நமக்கு இன்றியமையாததாக உள்ளன. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைப் பற்றி நாம் பேசும் போதெல்லாம், வைட்டமின் ஏ சத்தின் பெயர் முதல் பட்டியலில் வரும். வைட்டமின் ஏ சத்தானது நமது கண்களுக்கும், நரம்புகளுக்கும், தோலிற்கும், மற்றும் ஹார்மோன் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. இந்த சத்து நிறைந்த உணவுகளை உண்பவர்கள், அவர்களின் கண்பார்வை மேம்படுகிறது, அதே போல் மாலைக் கண் நோய் போன்ற நோய்களின் அபாயமும் கணிசமாக குறைகிறது. ஆனால் வைட்டமின் ஏ அடிப்படையிலான உணவை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது ஆபத்தானது என்று பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் நாம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வைட்டமின் ஏ அதிகம் உள்ள உணவுகள்
வைட்டமின் ஏ சத்து குறைவாக உள்ளவர்கள் இனிப்பு உருளைக்கிழங்கு, பப்பாளி, தயிர், சோயாபீன், முட்டை, பால், கேரட், மஞ்சள் காய்கறிகள், ஆரஞ்சு காய்கறிகள், கீரை உள்ளிட்ட பச்சைக் காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும், ஆனால் இதற்கும் வரம்பு உண்டு. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான்.
வைட்டமின் ஏ அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்
1. வைட்டமின் ஏ கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்பட்டாலும், நீங்கள் அதை ஒரு வரம்பிற்கு மேல் உட்கொண்டால் கண் பார்வை மங்கலாக ஆகலாம்.
2. அதிக அளவு வைட்டமின் ஏ அடிப்படையிலான உணவின் காரணமாக, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். எனவே, உணவியல் நிபுணரின் ஆலோசனையின் பேரில் அதன் வரம்பை நிர்ணயிக்கவும்.
3. அதிகப்படியான வைட்டமின் ஏ எலும்புகள் மற்றும் மூட்டுகளில் வலியை ஏற்படுத்தும், எனவே நடுத்தர வயது மற்றும் வயதானவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | நாள் முழுவதும் கணிணியில் வேலையா.. 20-20-20 விதியை கண்டிப்பாக பின்பற்றவும்!
4. வைட்டமின் ஏ உணவுகளை அதிகமாக உட்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு, சரியல்ல.
5. பெண்களுக்கு அதிக அளவு வைட்டமின் ஏ இருப்பது சரியல்ல, ஏனெனில் இது ஒழுங்கற்ற மாதவிடாய்களை ஏற்படுத்தும்.
6. எதையும் அளவிற்கு அதிகமாக உட்கொள்வது ஆபத்து. வைட்டமின் ஏ நிறைந்த உணவை அதிகமாக சாப்பிடுவது சோர்வு மற்றும் பலவீனம் போன்ற புகார்களை ஏற்படுத்தும்.
7. உங்கள் தலைமுடி வலுவிழந்து, தொடர்ந்து உதிர்வதால் வழுக்கை ஏற்படும் அபாயம் அதிகமாக இருந்தால், உடனடியாக வைட்டமின் ஏ உணவுகளை உட்கொள்வதைக் குறைக்கவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | பார்வையை கூர்மையாக்கும் வைட்டமின் A நிறைந்த ‘சில’ சைவ உணவுகள்!
மேலும் படிக்க | கோடை வந்து விட்டது... குழந்தைகளுக்கு ‘இந்த’ உணவுகளை கொடுக்காதீங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ