மனித ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத கனிமங்களில் முக்கியமான ஒன்று இரும்புச் சத்து. பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு, குறிப்பாக இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம் மற்றும் ஆக்ஸிஜனை உடலிம் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்கு இரும்புச்சத்து மிகவும் அவசியமானது. இரும்புச்சத்து குறைபாட்டை இரத்த சோகை என்றும் அழைக்கிறோம். இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட்டால், சோர்வு, பலவீனம், தோல் வெளுத்துப்போவது மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகள் குறைந்து போவதற்கு வழிவகுக்கும். 
ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் இரும்புச்சத்து நமக்கு முக்கியமானது. எனவே, நாம் நமது உடலில் போதுமான இரும்பு அளவை பராமரிப்பது முக்கியமானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்
நமது உணவில் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை தினசரி அடிப்படையில் உண்ண வேண்டும். இரும்புச்சத்து கொண்ட பருப்பு வகைகள், விலங்குகளின் கல்லீரல், வைட்டமின்கள் பி12, ஏ, டி, பி6 கொண்ட உணவுகள், ஓட்ஸ் என பல பொருட்களை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். 


இரும்புச்சத்தைப் பாதிக்கும் காரணிகள்
இரும்புச்சத்து உள்ள உணவுகளை உட்கொண்டாலும், வைட்டமின் சி சத்து தான், இரும்புச் சத்தை நிலைநிறுத்த உதவுகிறது, சிட்ரஸ் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது நன்மை பயக்கும். 


மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் பிரச்சனையா? அதிக கொழுப்பையும் சட்டுன்னு குறைத்து கரைக்கும் பழத்தோல்


ஆனால், இரும்புச்சத்து கொண்ட உணவை சாப்பிட்டாலும், காபி, பிளாக் டீ, கோகோ, சாக்லேட், பால், பால் பொருட்கள், சோயா, பருப்புகள் மற்றும் முழு தானியங்கள் உள்ளிட்ட சில உணவுகள் மற்றும் பானங்கள் இரும்புச் சத்தை உடல் உறிஞ்சுவதை பாதிக்கும் என்பதால், உணவுடன் இவற்றை தவிர்ப்பது நல்லது.


யாருக்கு எவ்வளவு இரும்புச்சத்து தேவை
இரும்புச்சத்தின் தேவைகள் வயது மற்றும் பாலினத்தின் அடிப்படையில் மாறுபடும், அதேபோல அதிகப்படியான இரும்புச்சத்தும் தீங்கு விளைவிக்கும், இது வயிற்று அசௌகரியம் முதல் உறுப்பு செயலிழப்பு வரை பல அறிகுறிகளை ஏற்படுத்தும். எனவே, இரும்புச்சத்து அளவை சீராக பராமரிக்க வேண்டும். 


உடலில் போதுமான இரும்புச்சத்து இல்லாதபோது, ​​​​அது ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக பாதிக்கும். இரும்புச்சத்து குறைபாட்டின் சில பொதுவான அறிகுறிகள் என்ன என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.


மேலும் படிக்க | இதய நோய் முதல் கல்லீரல் வரை.... நாவல் பழ இலை டீ ஒன்றே போதும்!


சோர்வு: வழக்கத்திற்கு மாறாக சோர்வாக அல்லது பலவீனமாக இருப்பது இரும்புச்சத்து குறைபாட்டின் பொதுவான அறிகுறியாகும்.
மூச்சு திணறல்: சுவாசிப்பதில் சிரமம், குறிப்பாக உடல் செயல்பாடுகளின் போது, ​​இரத்தத்தின் ஆக்ஸிஜன் சுமந்து செல்லும் திறன் குறைவதால் ஏற்படும்.
தோல் வெளுத்துப் போவது: வழக்கத்தை விட தோல் நிறம் வெளுத்துப் போய் காணப்படுவது குறிப்பாக முகம் வெளுத்துப்போவது
தலைச்சுற்றல் மற்றும் மயக்கம்: மயக்கம் அல்லது தலைசுற்றல் போன்ற உணர்வு, குறிப்பாக விரைவாக எழுந்து நிற்கும் போது மயக்கம் வருவது
நகங்கள் உடைவது: நகங்கள் அடிக்கடி உடைவது, பிளவுபடுவது
தலைவலி: அடிக்கடி அல்லது கடுமையான தலைவலி இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.


மேலும் படிக்க |  உடல் பருமன் சட்டுனு குறையணுமா... ‘இவற்றை’ பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்!


அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களிலும் கர்ப்ப காலங்களிலும் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது இயல்பான ஒன்று. பெண்களுக்கு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உகந்த இரும்பு சத்தினை பராமரிப்பது மிகவும் முக்கியமானதாகும்.


இரும்புச்சத்து குறைபாடு சோர்வு, பலவீனம் மற்றும் தலைச்சுற்றலை ஏற்படுத்தும். இரத்த சோகையைத் தடுக்கவும், ஆற்றல் அளவை பராமரிக்கவும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.


(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Superfruits: வண்ணவண்ணமான பழங்கள் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ