சீனா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட பல ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கோவிட் -19  தொற்று பாதிப்புகள் திடீரென அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவிலும் நான்காவது அலை ஏற்படுவதற்கான எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகெங்கிலும்  'ஸ்டீல்த் ஒமிக்ரான்' (Stealth Omicron) எனப்படும் புதிய மாறுபாட்டால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இது கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாட்டின் துணை மாறுபாடாகும்.


ஸ்டெல்த் ஓமிக்ரான் என்றால் என்ன ?


ஸ்டீல்த் ஒமிக்ரான் என்பது, இந்தியாவில் கோவிட்-19 இன் மூன்றாவது அலைக்கு பின்னால் இருந்த, மிக வேகமாக பரவி வந்த ஒமிக்ரானின் துணை மாறுபாடு ஆகும். இந்த மாறுபாடு அறிவியல் ரீதியாக BA.2 Omicron மாறுபாடு என குறிப்பிடப்படுகிறது.


மேலும் படிக்க |  Corona fourth wave: வீரியம் மிக்க ஓமிக்ரான் வைரசால் ஹாங்காங்கில் நான்காவது கோவிட் அலை


'ஸ்டீல்த் ஒமிக்ரான்'  ஒமிக்ரானை விட 1.5 மடங்கு அதிகமாக   பரவும்  தொற்றுநோயாக இருக்கலாம் என   டென்மார்க்கின் ஸ்டேட்டன்ஸ் சீரம் இன்ஸ்டிட்யூட்டின் (SSI)  பூர்வாங்க ஆய்வுகள் தெரிவிக்கின்றன


நோயை கண்டறிவது கடினம்


'ஸ்டீல்த் ஒமிக்ரான்' மாறுபாட்டை PCR பரிசோதனைகள் மூலம் கண்டறிவது கடினம். ஏனென்றால், புதிய மாறுபாடு ஸ்பைக் புரதத்தில் உள்ள முக்கிய பிறழ்வுகளைத் தவறவிடுகிறது என்கின்றனர் நிபுணர்கள். ஸ்டீல்த் ஒமிக்ரான், கோவிட் வைரஸின் ஒமிக்ரான் பதிப்பின் இரண்டு துணை வகைகளை BA.1 மற்றும் BA.2 என்று ஒருங்கிணைக்கிறது.


ஒமிக்ரான் மாறுபாட்டிலிருந்து  'ஸ்டீல்த் ஓமிக்ரான்' எவ்வாறு வேறுபடுகிறது


ஸ்டெல்த் ஓமிக்ரான் ஒமிக்ரான் மாறுபாட்டை விட கடுமையானது என்பதை உறுதிப்படுத்த அதிக தரவு இல்லை என்றாலும், ஒமிக்ரான் வகை மிகவும்  வேகமால பரவக்கூடியது என்று WHO எச்சரித்துள்ளது.


பிஏ.1 (ஓமிக்ரான்) தொற்றுக்குப் பிறகு பிஏ.2 (ஸ்டீல்த் ஒமிக்ரான்) உடனான மறு தொற்று BA.2 உடன் மீண்டும் தொற்றுக்கு எதிராக வலுவான பாதுகாப்பை வழங்குகிறது என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.மேல் சுவாசக் குழாயைப் பாதிக்கிறது


ஸ்டீல்த் ஒமிக்ரான் மாறுபாடு முதலில் மேல் சுவாசக் குழாயைப் பாதிக்கிறது. இருப்பினும், டெல்டாவைப் போலவே, BA.2 மாறுபாடு நுரையீரலைப் பாதிக்காது என்கின்றனர் நிபுணர்கள், அதனால்தான் இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மூச்சுத் திணறல், வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகியவை ஏற்படுவதில்லை.


மேலும் படிக்க | சீனாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா: பல இடங்களில் மீண்டும் ஊரடங்கு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR