உடம்பில் அதிக கொலஸ்டிரால் உள்ளதா? இந்த உணவுகள் மெல்லவும்!
சில உணவுப் பொருட்களை சாப்பிடுவதன் மூலம் கரையாத கொலஸ்டிரால் கரைய வைக்கலாம் என்கிறார்கள் ஊட்டச் சத்து நிபுணர்கள். அதிக அளவு கொலஸ்டிரால் இருந்தால் இதய நோய் ஆபத்தை அதிகரிக்க்கும், மாரடைப்பு உட்பட.
ஆனால் சில உணவுகளால் நம்முடைய உடலில் ஏற்படும் 'கெட்ட கொலஸ்டிரால் ' குறைக்க வழிகள் உண்டு.
இயல்பாகவே கொலஸ்டிரால் குறைக்க உதவும் உணவுகள்:
ஓட்ஸ்
ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது. உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் பெறுவது ஓட்ஸ் ஆகும்.
பீன்ஸ்
கருப்பு பீன்ஸில் அளவுக்கு அதிகமான அளவில் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன. இந்த உணவை அதிகம் சாப்பிட்டால், வயிற்றில் சேரும் கொழுப்புகள் குறையும் என்று ஆய்வுகள் பலவும் கூறுகின்றன. ஆகவே மறக்காமல் இந்த கருப்பு பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
வால்நட்
வால் நட் சாப்பிடுவதால் ரத்தத்தில் கொழுப்பு அளவு குறைந்து கொலஸ்ட்ரால் சம்பந்தமான நோய்கள் எதுவும் நெருங்குவதில்லை என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
அவகோடா
அவகோடாவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளின் அளவை அதிகரிக்கும்.
மீன்
மனித மூளையின் பல்வேறு செயற்பாடுகளுக்கு அவசியத்தேவையாக இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மீன்களில் அதிக அளவு இருப்பது இதற்கான முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். எனவே மீன் சாபிட்டால் கெட்ட கொழுப்பு குறைக்க உதவும்.