கல்லீரல் நோய்: சாதாரண அறிகுறி ஆனால் புறக்கணிக்கக்கூடாது
கல்லீரல் சிரோசிஸின் ஆரம்ப கட்டங்களில், கால் வீக்கம், அதிகரித்த சோர்வு, தூக்க முறை மாற்றங்கள், எளிதில் சிராய்ப்பு உள்ளிட்டவற்றை உடனடியாக கவனிக்க வேண்டும்.
கொழுப்பு கல்லீரல் நோய், ஸ்டீடோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு நவீன கால தொற்றுநோயாகவும், கரோனரி தமனி நோயைப் போன்ற குறிப்பிடத்தக்க தொற்று அல்லாத சுகாதாரப் பிரச்சனையாகவும் உள்ளது. இந்த நிலை கல்லீரல் உயிரணுக்களில் அதிகப்படியான கொழுப்பு திரட்சியை ஏற்படுத்துகிறது. இது கொழுப்பு கல்லீரல் முதல் ஆல்கஹாலிக் ஸ்டீட்டோஹெபடைடிஸ் வரை ஏற்படும் ஆபத்து இருக்கிறது.
ரூபி ஹால் கிளினிக்கின் டாக்டர் பிரகாஷ் வால்ஸ் பேசும்போது, "இல்லினாய்ஸ், சிகாகோவில் உள்ள எண்டோகிரைன் சொசைட்டியின் வருடாந்திர கூட்டத்தில் ENDO 2023-ல் வழங்கப்பட்ட சமீபத்திய ஆய்வுகளில் கொழுப்பு கல்லீரல் நோய் அதிகரித்து வருவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வளர்சிதை மாற்றத்துடன் தொடர்புடைய கொழுப்பு கல்லீரல் நோயின் (MAFLD) ஆபத்து, முன்பு மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) என அறியப்பட்டது. இது வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. இந்த நிலை இருதய நோய், வகை 2 நீரிழிவு நோய் மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது.
உலகளவில் அதிகரித்து வரும் நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகியவை கொழுப்பு கல்லீரல் நோயின் பரவல் மற்றும் தீவிரத்தன்மையை அதிகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு கொழுப்பு கல்லீரல் நோயின் முதன்மையான ஆபத்து காரணிகளில் ஒன்றாகும். நீரிழிவு நோயாளிகளின் கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகளை அடையாளம் காண்பது ஆரம்பகாலத்தில் மிகவும் முக்கியமானது. கல்லீரல் சிரோசிஸின் ஆரம்ப கட்டங்களில், கால் வீக்கம், அதிகரித்த சோர்வு, தூக்க முறை மாற்றங்கள், எளிதில் சிராய்ப்பு உள்ளிட்டவற்றை உடனடியாக கவனிக்க வேண்டும். குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை, ஹீமோகுளோபின் மற்றும் WBC எண்ணிக்கை, அத்துடன் கல்லீரல் செயல்பாட்டின் சோதனைகளில் கல்லீரல் நொதிகள் மற்றும் பிலிரூபின் மிதமான உயர்வு ஆகியவற்றை கொண்டு இதனை அடையாளம் கண்டு கொள்ளலாம்.
மேலும் படிக்க | உடல் எடை சட்டுனு குறைய... தூங்க செல்லும் முன் இந்த 8 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!
கொழுப்பு கல்லீரல் நோய் இருதய நோய்க்கான ஒரு சக்திவாய்ந்த ஆபத்து காரணியாக உருவெடுத்துள்ளது. இதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், கொழுப்பு கல்லீரல் நோய் கல்லீரல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் செயலிழப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைமைகளுக்கு முன்னேறும். கொழுப்பு கல்லீரல் நோயின் தீவிரம் இந்த சிக்கல்களின் அபாயத்துடன் நேரடியாக தொடர்புடையது. எனவே, இந்த அமைதியான தொற்றுநோயுடன் தொடர்புடைய பாதகமான விளைவுகளைத் தணிப்பதில் முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை எடுப்பது மிகவும் முக்கியம். மிதமான மது அருந்துதல் கூட கல்லீரலை பாதிக்கும்." என்று கூறினார்.
- எந்த வடிவத்திலும் மது அருந்துவது பாதுகாப்பானது அல்ல. ஆல்கஹால் தொடர்பான கல்லீரல் நோய்களைக் கொண்ட பல நபர்கள் மதுவை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.
- கல்லீரல் பிரச்சனைகளின் ஆரம்ப அறிகுறிகள், அடிக்கடி கவனிக்கப்படாமல், மேல் வலது வயிற்றில் அசௌகரியம் அல்லது வலி, சோர்வு (குறிப்பாக மதியம்) மற்றும் மஞ்சள் காமாலை ஆகியவை இருக்கும்.
- கொழுப்பு கல்லீரல் உள்ளவர்கள் நோயின் முன்னேற்றத்தைத் தடுக்க இந்த வளர்சிதை மாற்ற ஆபத்து காரணிகளைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் தீவிரமாக இருக்க வேண்டும். ஒருவருக்கு ஆல்கஹால் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், அவர்கள் மது அருந்துவதை முற்றிலுமாக நிறுத்துவது மட்டுமல்லாமல், கல்லீரல் நோயின் வளர்ச்சியைத் தடுக்கவும், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் மருத்துவர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது.
மேலும் படிக்க | வேகமா உடல் எடையை குறைக்கணுமா? இந்த ஜூஸ் குடிச்சா போதும்.. சூப்பரா குறைக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ