Tamil Nadu Today Latest News Live Updates: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் கிராமத்தில் 15 வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை (Sirkazhi NIA Raid) நடத்தி வருகின்றனர். அதிகாலை முதல் 15 குழுக்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று (ஜன. 27) மின் தடை (Tamil Nadu Power Cut Details) அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இல்லத்தரசிகள், வீட்டில் இருந்து பணிபுரியும் பணியாளர்கள், வியாபாரிகள், தொழிலாளிகள் இதுகுறித்து தெரிந்துவைத்துக்கொள்வது அவசியமாகும்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி (IND vs ENG 3rd T20) இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும். 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரில் முன்னிலை பெற்றிருப்பதால் இன்றைய போட்டியை வென்றால் தொடரை கைப்பற்றும்.
வரும் பிப்.1ஆம் மத்திய பட்ஜெட் தாக்கல் (Budget 2025) செய்யப்பட இருப்பதால் மக்கள், முதலீட்டாளர்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், பொருளாதார நிபுணர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அந்த வகையில், உள்ளூர், மாநில, தேசிய, உலக, பொருளாதார, விளையாட்டு என அனைத்து விதமான செய்திகள் குறித்த உடனடி அப்டேட்களை இங்கு காணலாம்.