கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான முதல் மருந்து... விரைவில் இந்தியாவில்!
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான முதல் மருந்து விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது.
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான முதல் மருந்து விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது.
கொரோனா வைரஸிற்கான வைரஸ் தடுப்பு மருந்து ஃபாவிபிராவிரை(Favipiravir) உற்பத்தி செய்து சந்தைப்படுத்த க்ளென்மார்க் மருந்துகள்(Glenmark Pharmaceuticals) ஒப்புதல் அளித்துள்ளது. நிறுவனம் இந்த மருந்தை ஃபேபிஃப்ளூ (FabiFlu) என்ற பெயரில் தயாரிக்கிறது. இந்த FabiFlu மாத்திரைகளின் 34 முழு துண்டு ரூ.3,500-க்கு கிடைக்கும், அதாவது ஒரு டேப்லெட்டுக்கு சுமார் 103 ரூபாய் செலவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஆபத்து; விரைவில் விசா நடைமுறையில் மாற்றம்!...
லேசான மற்றும் மிதமான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க FabiFlu என்ற மருந்து பயன்படுத்தப்படும். இந்த மருந்து மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கடைகளில் பரிந்துரைக்கப்படும் எனவும் தெரிகிறது.
முன்னதாக லேசான அறிகுறிகளுடன் 90 நோயாளிகளுக்கும், மிதமான அறிகுறிகளுடன் 60 நோயாளிகளுக்கும் மருத்துவ பரிசோதனையை க்ளென்மார்க்(Glenmark Pharmaceuticals) நடத்தியது.
இந்த மருந்து நோயாளியின் உயிரணுக்களில் நுழைந்து, வைரஸ் சுமைகளை குறைக்க தன்னை தானே நகலெடுப்பதைத் தடுக்கிறது. நோய்த்தொற்றின் ஆரம்ப கட்டத்தில் உடலில் வைரஸ் பரவுவதைத் தடுக்க அந்த மருந்து பயனுள்ளதாக இருக்கும். ஆய்வாளர்களின் கூற்றுப்படி, தொற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் ஃபேபிஃப்ளூ (FabiFlu) பயன்படுத்தப்பட வேண்டும். மருந்து எடுத்துக்கொண்ட பின்னர் வைரஸ் பிரதி (தன்னை நகலெடுக்கும் வீதம்) குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிறுவனம் கூறுகையில், நோயாளிக்கு முதல் நாளில் 200 மி.கி அளவு கொண்ட 9 மாத்திரைகள் கொடுக்கப்பட வேண்டும். அடுத்த நாளிலிருந்து 200 மி.கி அளவு கொண்ட 4-4 மாத்திரைகளுக்கு உணவுடன் அளிக்கப்பட வேண்டும். ஆய்வின் போது 80% நோயாளிகள் இந்த மருந்தின் விளைவால் குனம்பெற்றனர். தொற்றுநோய் காரணமாக அவசரகால பிரிவில் இந்த மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (DGCI) ஒப்புதல் அளித்துள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நோயாளிகள் மருந்து எடுத்துக்கொள்வதற்கு முன் ஒரு உறுதிமொழியைக் கொடுக்க வேண்டும் எனவும் நிறுவனம் குறிப்பிடுகிறது.
பயணிகள் ரயில்களை விரைவு வண்டிகளாக மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் -PMK!...
லேசான மற்றும் மிதமான கொரோனா நோயாளிகளுக்கு வாய்வழி வைரஸ் தடுப்பு மருந்துகளை கொண்டு வந்த முதல் நிறுவனம் க்ளென்மார்க்(Glenmark Pharmaceuticals) என்பது குறிப்பிடத்தக்கது.